பிக் பாஸுக்கு கூடுதல் அதிகாரம், புதுப் புது ரூல்ஸ்: தாக்குப்பிடிப்பார்களா போட்டியாளர்கள்?

By Siva

Recommended Video

புது ரூல்ஸ், பிக் பாஸுக்கு கூடுதல் அதிகாரம்..வீடியோ

சென்னை: கடந்த முறையை போன்று இல்லாமல் இந்த முறை பிக் பாஸுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாம்.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை துவங்க உள்ளது. இதற்காக பிரமாண்டமான வீடு செட் போட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக புதிதாக சிறை ஒன்றை கட்டியுள்ளனர்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.

அதிகாரம்

அதிகாரம்

இந்த சீசனில் பிக் பாஸுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாம். யாரையாவது வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பிக் பாஸ் முடிவு செய்தால் அவரை யாரும் கேள்வி கேட்க முடியாதாம். அவரின் முடிவே கட்டளையாம், அதுவே சாசனமாம்.

கடினம்

கடினம்

பிக் பாஸ் வீட்டில் தங்க வேண்டுமானால் விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமாம். இல்லை என்றால் வெளியே அனுப்பிவிடுவார்களாம். பிக் பாஸ் செட்டை சேதப்படுத்தினால் உடனே கெட் அவுட்டாம்.

போகலாம்

போகலாம்

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டாலோ இல்லை நடப்பை சமாளிக்க முடியாவிட்டாலோ போட்டியாளர்கள் தாராளமாக கிளம்பிச் சென்றுவிடலாமாம்.

வசதி

வசதி

இம்முறை விதிமுறைகள் கொஞ்சம் கடினமாக இருக்குமாம். ஆண் போட்டியாளர்களும், பெண் போட்டியாளர்களும் தங்கும் அறைகளை சேர்க்கும் வகையில் இடையே ஒரு கதவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை இப்படி இல்லை. பிக் பாஸ் வீட்டில் 60 கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். ஆனால் திரும்பும் பக்கம் எல்லாம் கேமராவாக உள்ளதாம். நிச்சயம் 60க்கும் மேற்பட்ட கேமராக்கள் உள்ளன என்கிறார்கள் வீட்டிற்கு சென்று வந்தவர்கள்.

2 நாட்கள்

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி துவங்க இன்னும் 2 நாட்கள் தான் உள்ளது என்பதை கூறும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் கமல் எதுவும் பேசாமல் தலையை மட்டும் அசைக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X