பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது ஒரு பெண்?: சத்தியமா ஐஸு கிடையாது
சென்னை: பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து இன்று யார் வெளியேறப்படுகிறார் என்று ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 2 வீட்டில் வாரா வாரம் ஒருவரை வெளியேற்றி வருகிறார்கள். கடந்த வாரம் கமல் ஹாஸன் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று பொன்னம்பலத்தை வெளியேற்றினார்.
இந்நிலையில் இந்த வார எவிக்னஷனுக்கான நேரம் வந்துவிட்டது.
வீடியோ
இன்று வெளியாகியுள்ள ப்ரொமோ வீடியோவில் எனக்கு போக வேண்டாம் என்று கமலிடம் கூறுகிறார் வைஷ்ணவி. எனக்கு இங்கே இருந்து ஜெயிக்க வேண்டும் போன்று உள்ளது சார் என்கிறார் சென்றாயன்.
வைஷ்ணவி
ப்ரொமோ வீடியோவை பார்த்த மக்களோ இன்று வைஷ்ணவி தான் வெளியேற்றப்படுகிறார் என்கிறார்கள். வைஷ்ணவியால் பரபரப்பு எதுவும் இல்லை என்று அனுப்புகிறார்களோ?
பிக் பாஸ் 2
அனைத்து போட்டியாளர்களையும் அனுப்பிவிட்டு பிக் பாஸ் 2 வீட்டை இழுத்துப் பூட்டுமாறு நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
ஐஸ்வர்யா
டேனி அல்லது ஐஸ்வர்யாவை வெளியே அனுப்பினால் நல்லது என்று பார்வையாளர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது கண்டிப்பாக நடக்காது.


Click it and Unblock the Notifications











