ஜூலியை கழுவிக் கழுவி ஊத்தின பாவத்துக்கு தான் இப்போ....
Recommended Video

சென்னை: ஜூலியை கழுவிக் கழுவி ஊத்திய பாவத்திற்கு தான் தற்போது பிக் பாஸ் பார்வையாளர்கள் கஷ்டப்படுகிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி போலியாக நடிக்கிறார் என்று ஆளாளுக்கு அவரை சமூக வலைதளங்களில் கழுவிக் கழுவி ஊத்தினார்கள்.
சிலர் தற்போதும் கூட ஜூலியை போலி போலி என்று திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜூலி
ஜூலி என்றாலே போலி என்று சொல்லியதில் மகிழ்ச்சி கண்டார்கள் பார்வையாளர்கள். அந்த பாவத்திற்கு தானோ என்னவோ இரண்டாவது சீசனில் பார்வையாளர்கள் கஷ்டப்படுகிறார்கள்.

பிக் பாஸ்
கடந்த சீசனில் ஜூலியை தான் போலி என்றார்கள் ஆனால் இந்த சீசனிலோ வீட்டில் உள்ள அனைவருமே போலியாகத் தான் உள்ளனர். அவர்கள் போலியாக இருப்பதால் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இல்லை. இதனால் பார்வையாளர்கள் கடுப்பாகிறார்கள்.

கமல்
போட்டியாளர்கள் போலியாக இருப்பதாக பார்வையாளர்கள் மட்டும் அல்ல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் ஹாஸனும் உணர்ந்துள்ளார். கடந்த சீசனை பார்த்துவிட்டு எச்சரிக்கையாக நடந்து கொள்கிறோம் என்ற பெயரில் போலியாக உள்ளார்கள் என்று அவரே தெரிவித்தார்.

பொன்னம்பலம்
நீங்கள் போலியாக உள்ளீர்கள் என்று போட்டியாளர்களிடமே தெரிவித்தார் கமல். பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் போலியாக தான் உள்ளனர் என்ற உண்மையை ஒப்புக் கொண்டார் பொன்னம்பலம்.

ரசிகர்கள்
பிக் பாஸ் 2 போட்டியாளர்களை பார்த்த பார்வையாளர்கள் இவர்களுடன் ஒப்பிட்டால் ஜூலி எவ்வளவோ பரவாயில்லை. இப்போ தான் ஜூலியின் அருமை புரிகிறது என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











