twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிக் பாஸ் 3:கார்டன் ஏரியா, புறணி கார்னர், ஸ்மோக்கிங் ரூம், சிறை... அட எல்லாத்தையுமே மாத்திட்டீங்களே!

    பிக் பாஸ் வீட்டின் வெளிப்புற அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    |

    Recommended Video

    Bigg Boss 3: பிக் பாஸ் வீட்டை சுற்றி பார்க்கணுமா.. அப்ப இங்க க்ளிக் பண்ணுங்க!- வீடியோ

    சென்னை: பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளர்கள் 100 நாட்கள் தங்கப் போகும் வீட்டை சுற்றிப் பார்க்க சென்றிருந்தோம். முந்தைய சீசனில் இருந்து இம்முறை வீடு நிறைய விசயங்களில் வேறுபட்டுள்ளது.

    வழக்கம் போல, இம்முறையும் சென்னை பூந்தமல்லியை அடுத்த ஈவிபி பிலிம் சிட்டியில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான பிரம்மாண்ட வீடு அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட காத்திருப்புக்குப் பின் ஊடக நண்பர்களின் அடையாள அட்டையை பரிசோதித்த பின், பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.

    போட்டியாளர்களைப் போல் கண்ணை எல்லாம் கட்டி அழைத்துப் போகவில்லை. இதனால், 'ஓ இது தான் ஸ்டோர் ரூமுக்கு இந்தப் பக்க வாசலா, இப்டி தான் போட்டியாளர்கள் வெளியேறுவார்களா?' என ஒவ்வொரு அறையின் அமைப்பையும் நின்று நிதானமாக பார்க்க முடிந்தது.

    ஆனால், இந்த நிதானம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அது என்னவென்று கீழே விரிவாகச் சொல்கிறேன்.

    மாறிய கதவு:

    மாறிய கதவு:

    ஆரம்பமே அதிர்ச்சி தான். போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் கதவு கடந்த இரண்டு சீசன்களிலும் ஒருபுறமாக ஒதுக்கித் தள்ளுவது போன்றே இருக்கும். அதன் சத்தமும் கிரீச் என வித்தியாசமாக இருக்கும். அந்த சத்தத்தை வைத்தே பிக் பாஸ் வீட்டிற்குள் யாரோ வருகிறார்கள் என போட்டியாளர்கள் தெரிந்து கொள்வார்கள். ஆனால், இம்முறை அப்படி இல்லை. திறந்து மூடும் மாதிரியான சாதாரண கதவு தான் வைத்திருக்கிறார்கள்.

    கார்டன் ஏரியா:

    கார்டன் ஏரியா:

    கதவைத் தாண்டி உள்ளே போனால், பிரமாண்டமாய் வரவேற்கிறது பிக் பாஸ் பெயருடன் கூடிய வீடு. ஆனால், நாம் நிகழ்ச்சியில் பார்ப்பது போல், கார்டன் ஏரியா அவ்வளவு விஸ்தாரமாக எல்லாம் இல்லை. பத்து எண்ணுவதற்குள் இந்த மூலையில் இருப்பவரை, அந்த மூலையில் இருந்து வையாபுரி கூட துரத்திப் பிடித்து விடலாம். அவ்வளவு தான் தூரம். வொய்ட் லென்ஸை வைத்து இத்தனை நாள் படம் காட்டி இருக்கிறார்கள் போலும்.

    புறணி கார்னர்ஸ்:

    புறணி கார்னர்ஸ்:

    கடந்த முறை போடப் பட்டிருந்த இருக்கைகள் பெரும்பாலும் அதே இடத்தில் தான் இருக்கின்றன. ஆனால், அதன் தோற்றம் தான் சற்று மாறியிருக்கிறது. குறிப்பாக பாத்ரூம் வாசலில் சோபா மிஸ்ஸிங். அங்கு மோடா போன்ற மூன்று இருக்கைகள் மட்டுமே உள்ளது. கடந்த சீசனில் கார்டன் ஏரியா சுவர் முழுக்க விவசாயம் சம்பந்தப்பட்டதாக, வயல்வெளி படங்களாக இருந்தது அல்லவா. இம்முறை கோபுரங்களும், ஓவியங்களுமாக இருக்கிறது.

    புகைப் பிடிக்கும் அறை:

    புகைப் பிடிக்கும் அறை:

    நீச்சல் குளத்திற்கு அருகிலேயே புகை பிடிக்கும் அறை. நிச்சயம் அதில் ஒரு சமயத்தில் ஒருவரைத் தவிர மேற்கொண்டு ஆட்கள் நிற்பது கஷ்டம் தான். புகை பிடிக்கும் அறையின் தோற்றமும் வித்தியாசமாக பழங்கால புகை போக்கி மாதிரி இருக்கிறது. நிச்சயம் அதில் தொடர்ச்சியாக நின்று புகைப் பிடிப்பவர்கள், கூடிய சீக்கிரம் மனம் வெறுத்துப் போய், ‘இப்டி ஒரு தம் உனக்குத் தேவையா?' என தன்னைத் தானே கேட்டுக் கொண்டு மனம் மாறி விடுவர். அப்படி இருக்கிறது அதன் அமைப்பு. அதையும் மீறி அங்கு புகைப்பிடிப்பவர்கள் நிச்சயம் பிஸ்தா தான்.

    பாத்ரூம் வசதி:

    பாத்ரூம் வசதி:

    அடுத்ததாக சிறை அறை. போன முறை இருந்த அதே இடத்தில் தான் இருக்கிறது. ஆனால் இம்முறை அதன் உள்ளேயே ஒரு பாத்ரூமும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த அறையின் நீள, அகலம் குறைந்து, சற்று சிறியதாக காட்சி அளிக்கிறது. கூடவே அந்த அறைக்குள் ஒரு மண்பானையில் தண்ணீரும் உள்ளது. ஆனால், அதன் குவளை தான் மிரட்டும் விதத்தில் மிகப் பெரியதாக இருக்கிறது. சிறைக்கு அருகிலேயே இருக்கும் கண்ணாடியின் மூலம் பிக் பாஸ் வீட்டின் படுக்கை அறையை தெளிவாக பார்க்க முடிகிறது. நாம இப்டி கஷ்டப்படும் போது, உள்ள சொகுசா ஏசில தூங்குறாங்களே என சிறையில் இருப்பவர் வயித்தெரிச்சல் பட்டுக் கொள்ள ஏதுவாக அப்படி உள்ளது போல.

    இவையெல்லாம் பிக் பாஸ் வீட்டின் வெளிப்புற செட்டிங் மட்டுமே. உள்ளே எப்படி இருக்கும் என மற்றொரு செய்தியில் பார்க்கலாம்.

    English summary
    It was a wonderful experience for us (media persons) in the bigg boss 3 tamil house, when we were allowed for a visit.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X