என்ன சேரன், இப்படி பண்ணிட்டீங்க: அந்த தங்கத்தையும், செல்லத்தையும் நாமினேட் செய்யலாமா?

By Siva

Recommended Video

Bigg Boss 3 Tamil: Day 8: Promo 2: சரவணன் என் பாத்திமாவை நாமினேட் செய்தார்?- வீடியோ

சென்னை: சேரன் 2 பேரை நாமினேட் செய்து பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் இந்த வார இறுதியில் வெளியேற்றப்படுவார். அதற்கான நாமினேஷன் வேலையை துவக்கிவிட்டார் பிக் பாஸ். இன்று நாமினேஷன் தொடர்பான ப்ரொமோ வீடியோக்கள் தான் வெளியிடப்படுகின்றது.

இந்நிலையில் இயக்குநர் சேரன், சித்தப்பு சரவணன் ஆகியோர் சக போட்டியாளர்களை நாமினேட் செய்யும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

லாஸ்லியா

ஒரு இரண்டு பேருக்கு எந்த முகமுமே இல்லாமல் இருக்கிறார்கள். தர்ஷன் மற்றும் லாஸ்லியா. அந்த இரண்டு பேரும் இந்த முகங்களுக்கு இடையே வேண்டாம் என்பது என் கருத்து என்று சேரன் பிக் பாஸிடம் தெரிவித்துள்ள ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. ப்ரொமோ வீடியோவை நம்பி அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வர முடியாது. உண்மை தெரிய இன்று இரவு வரை காத்திருப்போம். ஏனென்றால் பரபரப்பை கிளப்ப ப்ரொமோ வீடியோவில் ஒன்றை காட்டிவிட்டு நிகழ்ச்சியில் வேறு ஒன்றை காட்டுவதற்கு பெயர்போனவர் பிக் பாஸ்.

சரவணன்

சரவணன்

சித்தப்பு சரவணன் சேரன் மற்றும் பாத்திமா பாபு ஆகியோரை நாமினேட் செய்துள்ளார். சேரன் டாமினேட் செய்கிறார். அவர் இயக்குநர் என்பதை இங்கேயும் நிரூபிக்க நினைக்கிறார். பாத்திமா பாபு எல்லா விஷயத்திலும் குறுக்கிடுகிறார் என்று அவர்களை நாமினேட் செய்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் சரவணன்.

வனிதா

வனிதா

முன்னதாக இன்று காலை வெளியான முதல் ப்ரொமோ வீடியோவில் வனிதா சேரனை நாமினேட் செய்தார். ஆக, இதுவரை இரண்டு பேர் சேரனை நாமினேட் செய்துள்ளனர். ஆனால் சேரன் தர்ஷன் மற்றும் லாஸ்லியாவை நாமினேட் செய்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. மேலும் அதற்கு அவர் தெரிவித்த காரணமும் அதிர்ச்சி அளிக்கிறது.

அப்பா

வனிதா சேரனை தனது அப்பா போன்றவர் என்று கூறி நாமினேட் செய்தார். சேரனோ லாஸ்லியாவை தனது மகள் என்று கூறிவிட்டு நாமினேட் செய்துள்ளார். சேரன் செய்த காரியத்தால் லாஸ்லியா ஆர்மி கொந்தளித்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X