அவர் தேவதை இல்லை ஆன்ட்டி, லவ் வேண்டாம் தர்ஷன்: எச்சரிக்கும் ரசிகர்கள்

By Siva

Recommended Video

Bigg Boss 3 Tamil:Promo 2:வயதில் மூத்த ஷெரினை காதலிக்கும் தர்ஷன்

சென்னை: பிக் பாஸ் ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் வேண்டாம் தர்ஷன் வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.

பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் தர்ஷனை பார்வையாளர்கள் அனைவருக்குமே பிடித்துள்ளது. அவரை இளம் பெண்களுக்கு அதிகம் பிடித்துள்ளதால் சிங்கிள்ஸுகளுக்கு கடுப்பாக இருந்தாலும் பையன் நியாயமாக நடந்து கொள்கிறார் என்கிறார்கள்.

இந்நிலையில் தான் தர்ஷனை வைத்து ஒரு ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

தர்ஷன்

நான் ரொம்ப மிஸ் பண்ணுவது என் ஷெரின் டார்லிங்கை என்று தர்ஷன் கூறும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் வீட்டிற்கு வந்த முதல் நாள் தேவதையாக வந்தாள் ஷெரின் என்று கூறி தர்ஷன் அவரை கட்டிப்பிடிக்கிறார். அந்த அழகை பார்த்த உடனேயே நினைச்சேன் நான் சாகும் வரை சன்னியாசமாகத் தான் இருப்பேன் என்கிறார் தர்ஷன்.

எதிர்பார்க்கவில்லை

தர்ஷன் போய் ஷெரினை தேவதை என்று கூறி கட்டிப்பிடிப்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. தர்ஷன் உஷாராக இருந்து கொள்ளுங்கள். டிஆர்பிக்காக ஆன்ட்டி லவ்வில் உங்களை கோர்த்துவிடப் பார்க்கிறார்கள். சிக்கிடாதீங்க, உங்களுக்கு நல்ல பெண் கிடைப்பார். நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்கிறார்கள் ரசிகைகள்.

விமர்சனம்

பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் கவினுடன் சாக்ஷி, அபிராமி, லாஸ்லியாவை கோர்த்துவிட்டு வேடிக்கை பார்த்தார்கள். இந்த கவின் மூஞ்சியை பார்த்தாலே கடுப்பாக இருக்கிறது என்று விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் தர்ஷனை வைத்து கேம் ஆடப் போகிறார்களா?.

ஃபீலிங்

தர்ஷன் இப்படி எல்லாம் பேசுபவர் இல்லை. இது ஏதாவது டாஸ்காக இருக்கும். ஆனால் ஷெரினுக்கு தர்ஷன் மீது ஃபீலிங் இருக்கிறது என்கிறார்கள் நெட்டிசன்கள். என்ன தான் டாஸ்க் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா?. இப்படித் தான் சின்னப் புள்ளைய போய் ஆன்டி கிட்ட பேசவிடுவதா என்று நக்கல் செய்கிறார்கள் நெட்டிசன்கள். இதற்கிடையே பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்து ஒன்றும் செய்யாத சித்தப்பு சரவணனை கலாய்த்து மீம்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். லாஸ்லியா ஆர்மியோ வழக்கம் போன்று லாஸ்லியாவின் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு அவரின் அழகை புகழ்ந்து கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X