கொளுத்திப் போடும் கமல், முகத்திரையை கிழித்த பிக் பாஸ்: இது தான்யா ப்ரொமோ

By Siva

சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சி குறித்து 3வதாக வெளியாகியுள்ள ப்ரொமோ பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி தொடர்பாக இன்று வெளியான 2 ப்ரொமோக்களை பார்த்தவர்கள் கடுப்பானார்கள். இந்நிலையில் தற்போது 3வதாக வெளியான ப்ரொமோ அவர்களுக்கு திருப்தி அளித்துள்ளது.

கமல் ஹாஸன் ஃபுல் ஃபார்மில் இருப்பதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கமல் ஹாஸன்

இங்கு இருப்பவர்களில் ஒருவர் அடித்த கமெண்ட் இது யாராக இருக்கும் என்று நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என கமல் ஹாஸன் போட்டியாளர்களிடம் கூறிய ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. என்ன சாத்தான் வேதம் ஓதுதா என்று கமல் சொல்ல யாரோ என்னைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள் என்று சேரன் தெரிவித்துள்ளார். அது உங்களை இல்லை மிஸ்டர் சேரன்.

கவின்

கவின்

கவின், அவன் அவ எவிக்ஷன் எபிசோடு டைம்ல கிளாப் வாங்குறதுனால டிராக் மாறிட்டான் என்று கமல் ஹாஸன் கூற சாக்ஷி முகத்தில் ஈயாடவில்லை. லாஸ்லியாவுக்கு மக்களிடையே ஆதரவு இருப்பது அறிந்த பிறகே கவின் சாக்ஷியை கழற்றிவிட்டதாக கூறப்படும் நிலையில் கமல் இப்படி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாண்டி

கவின் உனக்கு இந்த பெண்கள் சகவாசம் வேண்டாம். சாண்டி மாஸ்டருடன் இருந்தோமா, ஜாலியாக பேசினோமா என்று பொழுதை போக்கவும் என்று சிலர் அறிவுரை வழங்கியுள்ளனர். சிலரோ சாக்ஷியை பார்க்காதே லாஸ்லியாவுடன் மட்டுமே இருப்பா கவின். உங்களின் ஜோடி பார்க்க நன்றாக உள்ளது என்று கொளுத்திப் போட்டுள்ளனர். சிலரோ பிக் பாஸ் போட்டியாளர்களின் முகத்திரையை கிழிக்கிறார்கள் என்று கூறி சிரித்துள்ளனர்.

வனிதா

வனிதா விஜயகுமார் வெளியே சென்றதில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சி கொடூர மொக்கையாக உள்ளது. இந்த கருமம் பிடித்த கவினின் முக்கோண காதல் கதையை பார்த்து பார்த்து கடுப்பாக உள்ளது. அதனால் ஒயில்டு கார்டு மூலம் வனிதாவை மீண்டும் அழைத்து வந்து பிக் பாஸ் வீட்டில் சண்டையும், சச்சரவும் ஏற்படுத்தி எங்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்று பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X