இன்று இரவு ரணகளமாகப் போகும் பிக் பாஸ் வீடு: குஷியில் பார்வையாளர்கள்
Recommended Video
சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கியதற்கே இன்று தான் உருப்படியான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது என்று பார்வையாளர்கள் பாராட்டியுள்ளனர்.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மொக்கை, கொடூர மொக்கையாக உள்ளது என்று பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் கழுவிக் கழுவி ஊற்றினார்கள். நீங்கள் கொடுப்பதற்கு பெயர் டாஸ்கா இதற்கு சும்மாவே இருக்கலாம் பிக் பாஸ் என்று பலரும் திட்டினார்கள்.
இந்நிலையில் பிக் பாஸுக்கு ரோஷம் வந்து வித்தியாசமான டாஸ்க் கொடுத்துள்ளார்.
போட்டியாளர்கள்
பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களை இரண்டு கிராமமாக பிரித்து ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கிராம டாஸ்க் ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் இருக்கு இன்று இரவு செம என்டர்டெயின்மென்ட் இருக்கு என்கிறார்கள். அதே சமயம் ப்ரொமோ வீடியோவை முழுதாக நம்பிவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
தர்ஷன்
சித்தப்பு சரவணன் மீரா மிதுனை பார்த்தாலே பத்திக்கிட்டு வருகிறது என்பார். நேரம் கிடைக்கும்போது எல்லாம் அந்த பெண்ணை கலாய்ப்பார். இந்நிலையில் கிராமத்து டாஸ்கில் மீரா மீது சந்தோஷமாக கையை போட்டுள்ளாரே சித்தப்பு. இந்த கொடுமை ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் நம்ம நல்ல பையன் தர்ஷன் ஷெரினுக்கு போய் சாப்பாடு ஊட்டி விடுகிறார். என்ன கருமம்டா இது என்கிறார்கள் பிக் பாஸ் பார்வையாளர்கள்.

சாக்ஷி
கவின், ஸ்நேக் சாக்ஷி, லாஸ்லியா ஆகியோரின் முக்கோண காதல் கதையை காட்டியே கடந்த வாரம் முழுவதையும் ஓட்டிவிட்டார்கள். இந்த வாரமும் அந்த கொடுமையை தான் பார்க்கணுமா என்று நினைத்தபோது தான் இந்த கிராம டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலும் முக்கோண காதல் கதையை புகுத்திவிடாதீங்க பிக் பாஸ்.
ரணகளம்
இன்று இரவு பிக் பாஸ் 3 வீட்டில் ரணகளம் நடக்கும் என்று பார்வையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். கடந்த சீசனின் வேலைக்காரன் வேலைக்காரி டாஸ்க் போன்று இது இருக்கும் என்று நினைக்கிறார்கள். ஆக பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியதில் இருந்து இன்று இரவு தான் என்டர்டெயின்மென்ட் இருக்கு என்று பார்வையாளர்கள் குஷியாகியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











