பிக் பாஸ் 3: இந்த பிரபல நடிகை கன்பார்ம்.. கசிந்தது முதல் போட்டியாளர் விபரம்!
பிக் பாஸ் 3ல் நடிகை சாந்தினி கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.
சென்னை: பிக் பாஸ் சீசன் 3ல் நடிகை சாந்தினி கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் பிக் பாஸ் முதல் இரண்டு சீசன்களுக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, அடுத்த மாதம் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாக இருக்கிறது. கடந்த இரண்டு சீசன்களைத் தொகுத்து வழங்கிய கமலே இதனையும் தொகுத்து வழங்குகிறார்.
இதற்கான புரோமோ பட ஷூட்டிங் நேற்று முன் தினம் நடைபெற்றது. பிக் பாஸ் வீட்டை அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.

சாந்தினி:
இது ஒருபுறம் இருக்க, இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலையும் ஒருபுறம் நடந்து வருகிறது. அதன்படி, இம்முறை நடிகை சாந்தினியும் ஒரு போட்டியாளராக இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் வில் அம்பு மற்றும் ராஜா ரங்குஸ்கி படத்தில் நாயகியாக நடித்தவர்.

சுதாசந்திரன்:
அதேபோல் நடிகை லைலா மற்றும் சுதாசந்திரனின் பேரும் இந்தப் பட்டியலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவருமே தற்போது எப்படத்திலும் நடிக்கவில்லை. எனவே, இது எந்த அளவிற்கு உண்மை என்பது நிகழ்ச்சி தொடங்கும் நாளன்று தான் தெரியும்.

வதந்தி பட்டியல்:
ஏனெனில் ஒவ்வொரு முறையும் இந்தப் போட்டியாளர்கள் தான் கலந்து கொள்ளப் போகிறார்கள் என பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர், ஒரு வதந்தி பட்டியல் இணையத்தில் உலா வருவது வாடிக்கை தான். இதுவும் அதுபோல் வதந்தியா அல்லது சாந்தினி நிஜமாகவே பிக் பாஸ் 3ல் கலந்து கொள்கிறாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

புதிய படவாய்ப்புக்காக:
நடிகை சாந்தினிக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. அவரது நடிப்பில் விரைவில் காதல் முன்னேற்றக் கழகம் படம் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தைத் தவிர அவரது கைவசம் வேறு ஏதும் படமில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, புதிய படவாய்ப்புகள் பெறுவதற்காக அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவெடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











