90’ஸ் கிட்ஸ் உங்களுக்கு ஒரு குட் நியூஸ்... பிக் பாஸ் 3க்கு நம்ம ‘காதல் மன்னன்’ வர்றாரா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராம்கி கலந்து கொள்ள இருப்பதாக ஒரு தகவல் வைரலாகியுள்ளது.

சென்னை: பிக் பாஸ் சீசன் 3ல் நடிகர் ராம்கி கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் வரும் 23ம் தேதி முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இம்முறை பிக் பாஸ் வீட்டில் தங்கப் போகும் போட்டியாளர்கள் யார் என்ற தகவல் இன்னும் ரகசியமாகவே உள்ளது. போட்டி ஒளிபரப்பாகும் நாளன்று தான் யார் யார் போட்டியாளர்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

ஆனால், அதற்கு முன்னர் போட்டியாளர்கள் என பலரது பேர் இணையத்தில் உலா வருவது வழக்கம். அந்தவகையில் தற்போது, நடிகர் ராம்கியின் பெயர் தற்போது அடிபடத் தொடங்கியுள்ளது.

ராம்கி:

ராம்கி:

90களில் காதல் மன்னனாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நடிகர் ராம்கி. கழுத்தில் ஒரு ஸ்கார்ப்புடன் அவரது உடை அணியும் விதம், ஹேர்ஸ்டைல் போன்றவை ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. அவரைப் போலவே பலரும் உடையணிய விரும்பினர்.

மாசாணி:

மாசாணி:

செந்தூரப்பூவே, பூந்தோட்டக் காவல்காரன், சின்னப் பூவே மெல்லப் பேசு, இணைந்த கைகள் எனப் பல வெற்றிப் படங்களில் அவர் நடித்திருந்தார். சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்த அவர், மீண்டும் கருப்பு ரோஜா, மாசாணி போன்ற படங்களில் நடித்தார்.

பிக் பாஸ் 3:

பிக் பாஸ் 3:

நடிகை நிரோஷாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட ராம்கி, இடையில் சொத்து வரிப் பிரச்சினையில் சிக்கினார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க முயற்சித்து வருவதாகத் தெரிகிறது. இந்தச் சூழ்நிலையில் தான் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராம்கி வருவாரா?

ராம்கி வருவாரா?

முதல் சீசனில் 90ஸ் நடிகரான வையாபுரியும் இரண்டாவது சீசனில் 90 ஸ் நடிகரான பொன்னம்பலமும் கலந்து கொண்டார்கள். அந்தவகையில், இம்முறை ராம்கி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X