இந்த வாரம் பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்று கண்டுபிடித்துவிட்டார்கள் நெட்டிசன்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் எந்த போட்டியாளரையும் வெளியேற்ற மாட்டார்கள். இந்நிலையில் இரண்டாவது வாரம் துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் சக போட்டியாளர்களை நாமினேட் செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்று எங்களுக்கு தெரியுமே என்கிறார்கள் நெட்டிசன்கள். அந்த போட்டியாளர் வேறு யாரும் இல்லை ஜாங்கிரி மதுமிதாவாம்.
அது ஏன் மதுமிதா வெளியேறுகிறார் என்பதற்கு அவர்கள் காரணமும் வைத்துள்ளனர். பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் மதுமிதாவையே டார்கெட் செய்கிறார்கள். மதுமிதா நல்லது செய்திருக்கலாம். ஆனால் அதை எல்லாம் நிகழ்ச்சியில் காட்டாமல் அவர் பேசிய, செய்த கெட்டதை மட்டுமே காட்டுகிறார்கள்.
ஒரு இரண்டு நாள் வனிதா திட்டியதற்கே அதை தாங்க முடியாமல் மதுமிதா தனியாக அமர்ந்து தானாக புலம்புகிறார். இவரெல்லாம் எப்படி பிக் பாஸ் வீட்டில் தாக்குப்பிடிக்க முடியும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இயக்குநர் சேரன், லாஸ்லியா, தர்ஷன், சாக்ஷி ஆகியோர் கடைசி வரை வருவார்கள் என்பதும் நெட்டிசன்களின் கணிப்பு. வனிதாவை வைத்து எவ்வளவு டி.ஆர்.பி.யை ஏற்ற முடியுமோ அந்த அளவுக்கு ஏற்றிவிட்டு பேக்கப் செய்துவிடுவார்கள். சண்டக்கோழியான மீரா மிதுனுக்கும் அதே கதி தான்.
சாண்டி மாஸ்டரால் தான் பல பேருக்கு பொழுது போகிறது. அதனால் அவரும் பிக் பாஸ் வீட்டில் பல வாரங்கள் இருப்பார். கவினை அவரால் முடிந்த அளவுக்கு கடலை போட வைத்து, காதல் கதைகளை உருவாக்கி, அதை அத்துவிட்டு அவரை வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள். பாத்திமா பாபுவுக்கு இப்பவே டாஸ்க் செய்ய முடியவில்லை. அவரால் கடினமான டாஸ்குகளை நிச்சயம் செய்ய முடியாது. அதனால் டாஸ்குகள் கடினமாகும்போது அவரையும், சீனியர் சிட்டிசன்களான சரவணன், மோகன் வைத்யா ஆகியோரையும் வெளியேற்றிவிடுவார்கள்.
ரேஷ்மா, அபிராமியை ஒப்புக்குச்சப்பானியாக வைத்துள்ளார் பிக் பாஸ். அதனால் அவர்களாலும் தாக்குப்பிடிக்க முடியாது என்று விமர்சிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











