Bigg Boss 3: பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக நடந்த அதிசயம்
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக ஒரு அதிசயம் நடந்துள்ளது.
பிக் பாஸ் 3 வீட்டில் இருந்த மீரா மிதுன் ரகசிய அறைக்கு அனுப்பி வைக்கப்படுவாரோ என்ற சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். மீராவை வெளியேற்றியதை பார்த்து பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மீரா இல்லாமல் பிக் பாஸ் வீடு தற்போது நல்லவிதமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மீரா மிதுன்
வனிதாவை தேடி பிக் பாஸ் வீட்டிற்கு போலீசார் வந்தனர். இதையடுத்து வனிதா வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் மோசடி வழக்கு தொடர்பாக எழும்பூர் போலீசார் மீரா மிதுனிடம் விசாரணை நடத்த பிக் பாஸ் வீட்டிற்கு சென்றனர். இதை பார்த்த பிக் பாஸ் பார்வையாளர்கள் மீரா கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார்கள்.

வெளியேற்றம்
பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து ஜூலை 28ம் தேதி இரவு மீரா மிதுன் தான் வெளியேற்றப்படுவார் என்று பார்வையாளர்கள் தெரிவித்தனர். அவர்கள் கணித்தது போன்றே நடந்துவிட்டது. வழக்கமாக பார்வையாளர்கள் ஒன்று நினைக்க பிக் பாஸ் வேறொன்றை செய்து அவர்களை அதிருப்தி அடைய செய்வார். இந்நிலையில் தான் இந்த அதிசயம் நடந்துள்ளது. சில போட்டியாளர்களை வெளியேற்ற பார்வையாளர்கள் மாய்ந்து மாய்ந்து ஓட்டு போட்டும் அவர்களை பிக் பாஸ் காப்பாற்றியது எல்லாம் முன்பு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

காதல்
விஷம் மீராவை அனுப்பியாச்சு, அப்படியே இந்த வாரம் அந்த ஸ்நேக் சாக்ஷியை வெளியேற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் பார்வையாளர்கள். சாக்ஷி வெளியேறுவது கஷ்டம் பாஸ். அவரை வைத்து தான் முக்கோண காதல் கதை ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால் கவின், சாக்ஷி, லாஸ்லியா ஆகியோர் இப்போதைக்கு வெளியேற்றப்பட மாட்டார்கள்.

கமல் ஹாஸன்
வார இறுதி நாட்களில் பிக் பாஸ் அரங்கில் பார்வையாளர்கள் என்ற பெயரில் இருக்கும் ஆட்களை பார்த்தாலே கடுப்பாகிறது என்று பலரும் தெரிவித்துள்ளனர். சரவணன் தான் செய்த கேவலமான விஷயத்தை தெரிவிக்க அதை கேட்டு அரங்கில் இருந்தவர்கள் கை தட்டினார்கள். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அரங்கில் பார்வையாளர்கள் யாரும் இல்லாமல் கமலை மட்டும் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











