Bigg Boss 3: சுத்தி வளைக்காமல் நேராக எவிக்ஷனுக்கு வந்த கமல்
சென்னை: பிக் பாஸ் 3 குறித்து இன்று வெளியான முதல் ப்ரொமோ வீடியோவிலேயே நேரடியாக எவிக்ஷன் பற்றி பேசியுள்ளார் கமல் ஹாஸன்.
பிக் பாஸ் 3 வீட்டில் உள்ள போட்டியாளர்களில் ஒருவர் இன்று வெளியேற்றப்படுவார். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரொமோ வீடியோவில் தீதும் நன்றும் பிறர்தர வாரா என்கிறார் கமல் ஹாஸன்.
கடந்த வாரம் எவிக்ஷன் பற்றி ஒரு ப்ரொமோ கூட வெளியாகவில்லை. இந்நிலையில் முதல் வீடியோவிலேயே எவிக்ஷனுக்கு வந்துவிட்டார் கமல்.
எவிக்ஷன்
கமல் பேசப் பேச சாக்ஷிக்கும், லாஸ்லியாவுக்கும் முகம் ஏன் அப்படி போகிறது என்று தெரியவில்லை. லாஸ்லியாவை டான்ஸ், பாட்டுக்காக கொண்டாடியவர்களே தற்போது அவர் கக்கூஸ்லியா என்று கிண்டல் செய்யத் துவங்கிவிட்டனர். நாட்கள் செல்லச் செல்ல லாஸ்லியாவின் பெயர் கண்டபடி டேமேஜாகிக் கொண்டிருக்கிறது.
லாஸ்லியா
லாஸ்லியாவை ஜூலியுடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் கிண்டல் செய்கிறார்கள். கவின் கொடுத்த டாஸ்கை கச்சிதமாக முடித்து லாஸ்லியாவின் பெயரை கெடுத்துவிட்டார். கவினுக்கு காதலி இருப்பது தெரிந்தும் இந்த லாஸ்லியாவும், சாக்ஷியும் அவருக்காக போட்டி போடுவது வேடிக்கையானது. அதிலும் சாக்ஷி கவினை பற்றி வனிதாவிடம் கேவலமாக பேசிவிட்டு தற்போது வேறுவிதமாக நடந்து கொள்கிறார்.

சாக்ஷி
இன்று இரவு நிச்சயம் கவின், லாஸ்லியா, சாக்ஷி ஆகியோர் வெளியேற மாட்டார்கள். அந்த தகவல் உறுதியாகிவிட்டது. அவர்களை வைத்து முக்கோண காதல் கதையை இன்னும் சில வாரங்களுக்கு ஓட்டி பார்வையாளர்களை கடுப்பேற்றுவது என்று முடிவு செய்துவிட்டார் இந்த பிக் பாஸ். டிவி மூலம் பலரும் நம்மை பார்க்கிறார்கள் என்ற நினைப்பு கூட இல்லாமல் சாக்ஷி, லாஸ்லியா கவினுக்காக போட்டி போடுவது முகம் சுளிக்க வைக்கிறது.
கோரிக்கை
எந்த போட்டியாளரை வெளியே அனுப்ப வேண்டும் என்பதை கமல் ஹாஸனே முடிவு செய்வது போன்று அவரிடம் பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சாக்ஷியை விரட்டிவிட்டுவிட்டு மறுவேலையை பாருங்க ஆண்டவரே என்கிறார்கள் பார்வையாளர்கள். அட, யாரை வெளியேற்ற வேண்டும் என்பதை தீர்மானிப்பதே பார்வையாளர்களாகிய நீங்கள் தான் பாஸ். அப்படி இருக்கும்போது கார்டில் உள்ள பெயரை வாசிக்கும் கமலால் என்ன செய்ய முடியும்?


Click it and Unblock the Notifications











