கமல் சொன்னதையா பொய்யாக்குறீங்க?: ஆண் போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் ஆப்பு
சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் உள்ள ஆண்கள் பெண் போட்டியாளர்கள் போன்று உடை அணிந்து நடிக்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் இது வெறும் ஷோ அல்ல நம் வாழ்க்கை என்று கூறுகிறார் அதை தொகுத்து வழங்கும் உலக நாயகன் கமல் ஹாஸன். ஆனால் பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் ஆண்களோ இது வாழ்க்கை அல்ல வெறும் ஷோ என்று ஒதுங்கி உள்ளனர்.
இந்நிலையில் தான் பிக் பாஸ் அவர்களுக்கு பெரிய ஆப்பாக வைத்துவிட்டார்.
கவின்
பிக் பாஸ் வீட்டில் உள்ள ஆண் போட்டியாளர்கள் பெண் போட்டியாளர்கள் போன்று உடை அணிந்து அவர்கள் போன்று காச்சு மூச்சென்று சண்டை போடும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. நம்ம கடலை பார்ட்டி கவின் இது தான் சான்ஸ் என்று குட்டியாக ஒரு கவுன் அணிந்து கொண்டு நான் தமிழ் பொண்ணு என்று சேட்டை செய்கிறார்.

சாண்டி
பெண் வேடத்தில் மோகன் வைத்யாவும், சாண்டி மாஸ்டரும் செம காமெடியாக உள்ளனர். நம்ம சித்தப்பு சரவணனோ எதற்கு வம்பு என்று ஒரு துண்டை மட்டும் எடுத்து மாராப்பு போன்று போட்டு கெட்டப்பை மாற்றியுள்ளார். முகென் ராவை பார்த்தாலே சிரிப்பு வருகிறது. அமைதியாக இருக்கும் தர்ஷனையே கத்த வைத்துவிட்டார்கள்.
ஆதரவாளர்கள்
லாஸ்லியா அழகாக உள்ளார் என்பதை தவிர அவரை பற்றி சொல்வதற்கு லாஸ்லியா ஆர்மியிடமே வேறு பாயிண்ட் இல்லை. இந்நிலையில் தான் இப்படி ஒரு மீம்ஸ் போட்டு லாஸ்லியா ஆர்மியை மரண கலாய் கலாய்த்துள்ளனர். அப்படி இருந்தும் எந்த ப்ரொமோ வீடியோ வெளியானாலும் லாஸ்லியா க்யூட், ஸ்வீட் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது லாஸ்லியா ஆர்மி.
கமல்
வார இறுதி நாட்கள் எப்பொழுது வரும் கமல் ஹாஸனை பார்க்கலாம் அவர் பேசுவதை கேட்கலாம் என்று பார்வையாளர்களும், போட்டியாளர்களும் ஆவலுடன் காத்திருப்பார்கள். இந்நிலையில் இந்த வார இறுதியில் எந்த பஞ்சாயத்தும் இல்லாமல் இருக்க பிரச்சனைகளை காமெடியாக்கிவிட்டார் பிக் பாஸ் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











