Bigg Boss 3 மீரா மிதுனுக்கு சரியான நோஸ்கட் கொடுத்த சித்தப்பு சரவணன்
சென்னை: மீரா மிதுனுக்கு சித்தப்பு சரவணன் செம நோஸ்கட் கொடுத்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி தொடர்பாக இதுவரை 3 ப்ரொமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளன. முதல் வீடியோவில் அபிராமியும், இரண்டாவது வீடியோவில் ஜாங்கிரி மதுமிதாவும் அழுதார்கள்.
இந்நிலையில் வெளியாகியுள்ள 3வது வீடியோவில் நல்ல வேளையாக எந்த போட்டியாளரும் கண்ணீர் விடவில்லை. ச்சே, இது என்ன பிக் பாஸ் வீடா, அழுகாச்சி வீடா என்று கடுப்பாகும் அளவுக்கு ஆளாளுக்கு அழுது கொண்டிருக்கிறார்கள்.
சரவணன்
பிக் பாஸ் 3 வீட்டின் கேப்டனாக உள்ளார் வனிதா விஜயகுமார். இந்நிலையில் அடுத்த வாரத்திற்கான கேப்டனை தேர்வு செய்யும் வேலையில் இறங்கியுள்ளார் கமல். அப்பொழுது மீரா மிதுனோ, பெண் வேட்பாளர்களுக்கு இன்னும் நிறைய வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சிரித்தபடியே கமலிடம் தெரிவித்தார். இதை கேட்ட சரவணனோ, ஏற்கனவே தலைவர் பொண்ணுதாம்மா என்று கூற மீராவுக்கு முகமே மாறிவிட்டது.
மீரா மிதுன்
மீரா மிதுனை பிக் பாஸ் 3 பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை. அவரை பார்த்தாலே கடுப்பாகி திட்டுகிறார்கள். இந்நிலையில் கமல் முன்பே சரவணன் மீராவுக்கு நோஸ்கட் கொடுத்தது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. சித்தப்பு ராக்ஸ் என்கிறார்கள்.
ஏமாற்று வேலை
மீரா மிதுன் சர்ச்சையில் சிக்கிய செய்திகளை எல்லாம் தேடிப் பிடித்து படிக்கிறார்கள் பிக் பாஸ் 3 பார்வையாளர்கள். இந்நிலையில் மீரா பாவம் போன்று முகத்தை வைத்துக் கொண்டு பெண்களுக்காக பேசுகிறேன் என்று பேசியதை பார்த்த நெட்டிசன்களோ, போதும்மா நடிப்பு, நீ ஏமாற்றியது கூட பெண்களைத் தான் என்கிறார்கள்.

முகென் ராவ்
பிக் பாஸ் வீட்டின் தலைவர் பதவிக்கு வர மோகன் வைத்யா, முகென் ராவ் உள்ளிட்டோரும் ஆர்வம் காட்டியுள்ளனர். மோகன் வைத்யாவுக்கு ஆதரவு அதிகம் உள்ளது. இருப்பினும் முகென் ராவ் தலைவரானால் நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் விருப்பம். தமிழக ரசிகர்கள் முகென் ராவ் மீது மரியாதை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











