Bigg Boss 3 அது எப்படி கமலை பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்கலாம்?

By Siva

சென்னை: பிக் பாஸ் 3 ப்ரொமோவில் பார்வையாளர் ஒருவர் கமல் ஹாஸனை பார்த்து ஒரு கேள்வி கேட்டுள்ளார்.

பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து இன்று யார் வெளியேறப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள பார்வையாளர்கல் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் வெளியாகியுள்ள ப்ரொமோ வீடியோவில் கமல் ஹாஸன் எவிக்ஷன் பற்றியே பேசவில்லை.

மாறாக பார்வாளர் ஒருவர் கமலிடம் வில்லங்கமான கேள்வி கேட்டுள்ளார்.

கமல் ஹாஸன்

ப்ரூட்டி காலர் ஆப் தி வீக்கில் பார்வையாளர் ஒருவர் கமல் ஹாஸனுக்கு போன் செய்து செந்தில் மாதிரியே கவுண்டமணியுடன் இருப்பீர்களா இல்லை வடிவேலு மாதிரி தனியாக இருப்பீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அந்த நபர் கமல் ஹாஸனின் அரசியல் வாழ்க்கை தொடர்பாகத் தான் அந்த கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு கமல் என்ன பதில் அளிக்கிறார் என்பதை இன்று இரவு பார்ப்போம்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாஸன் அரசியல் பேசுவது புதிது அல்ல. பலர் அவர் கூறும் கருத்துகளை கேட்கவே பிக் பாஸ் பார்க்கிறார்கள். அந்த பார்வையாளர் கேட்ட கேள்விக்கு கமல் சொல்லும் பதிலை பார்க்க இன்று இரவு பலரும் நிகழ்ச்சியை பார்ப்பார்கள். அந்த நபர் கேட்ட கேள்வி அர்த்தமற்றது என்று எத்தனை பேர் நினைக்கிறீர்கள்?

கவின்

முதலில் சாக்ஷி இப்போ லாஸ்லியா என்று வாரத்திற்கு ஒரு பெண்ணை காதலித்து ஏகப்பட்ட பிரச்சனையில் சிக்கியுள்ளார் கடலை பார்ட்டி கவின். கவினுக்கு கமல் ஹாஸன் லெஃப்ட் அன்ட் ரைட் கொடுப்பார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். கவின் செய்வதற்கு பெயர் காதல் இல்லை. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் வரை டைம் பாஸுக்காக அவர் பெண்களின் உணர்ச்சியுடன் விளையாடுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மொக்கை

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட ப்ரொமோ வீடியோ தான் நன்றாக இருக்கும். ஆனால் இன்று வெளியாகியுள்ள ப்ரொமோவே இவ்வளவு மொக்கையாக உள்ளதே. அந்த காலர் பிக் பாஸ் குழுவை சேர்ந்தவராக இருப்பாரோ என்ற சந்தேகம் பார்வையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இது நல்ல சந்தேகம். அந்த காலர் தானாக அந்த கேள்வியை கேட்டது போன்று இல்லையே என்கிறார்கள் பார்வையாளர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X