Bigg Boss 3: ஆனானப்பட்ட வனிதாவையே அழ வச்சுட்டாரே பிக் பாஸ்

By Siva

சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் மற்றவர்களை மிரட்டும் வனிதா விஜயகுமாரையே ஃபீல் பண்ணி அழ வைத்துவிட்டார்கள்.

பிக் பாஸ் 3 வீட்டில் இன்று இரவு ஒரே அழுகாச்சியாகத் தான் இருக்கும் போன்று. இன்று வெளியாகியுள்ள 3 ப்ரொமோ வீடியோக்களிலுமே போட்டியாளர்கள் அழுது கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் 3வது ப்ரொமோ வீடியோவில் சொர்ணாக்கா என்று அழைக்கப்படும் வனிதா விஜயகுமார் அழுகிறார்.

வனிதா

வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் என் மகன் விஜய ஸ்ரீஹரி பிறந்தநாள் என்று கூறி வனிதா விஜயகுமார் அழுகிறார். அம்மா அல்லது குழந்தையை தான் காப்பாற்ற முடியும் என்றார்கள். அவனை என்னிடம் கொண்டு வந்தபோது எனக்கு வாழ்க்கையில் யாருமே நிரந்தரமாக இல்லை நீ என்னை விட்டுட மாட்டாய் அல்லவா என்று கேட்டதும் அவன் என் கையை பிடித்தான், நான் அழுதுவிட்டேன் என்று வனிதா தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள்

மோகன் வைத்யா கடுமையாக பேசியதும் தர்ஷன் அழுததை பார்த்த ரசிகர்கள் ஃபீல் பண்ணினார்கள். ஆனால் வனிதா அழுததை பார்த்து யாருக்கும் கண்ணீர் வரவில்லை. பிக் பாஸ் 3 வீட்டிற்கு வந்த வேகத்தில் பலரின் வெறுப்பை சம்பாதித்துவிட்டார் வனிதா. அதனால் அவர் அழுவதை பார்த்து ரசிகர்கள் சிரிக்கும்படியாகிவிட்டது.

பிக் பாஸ்

பிக் பாஸ்

மகன் விஜய ஸ்ரீஹரி தன்னை புரிந்து கொண்டு மீண்டும் தன்னிடம் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதாக வனிதா விஜயகுமார் முதல் நாள் தெரிவித்தார். அவர் பிக் பாஸ் வீட்டில் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்தால் மகனுக்கு அவர் மீது மேலும் கோபம் ஏற்படும் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

சோகம்

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் அழுது கொண்டே இருக்கிறார்கள். இப்படி பிக் பாஸ் வீடு சோக வீடாக இருப்பது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. முதல் நாளே காதல் காட்சி வைத்த பிக் பாஸா இப்படி சோக கீதம் பாட வைப்பது. ஸ்க்ரிப்டை மாற்றுங்க பிக் பாஸ் என்கிறார்கள் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X