கஸ்தூரியை வைத்து அரசியல் பேசிய கமல் ஹாஸன்
சென்னை: பிக் பாஸ் 3 வீட்டிற்கு புதிதாக வந்துள்ள கஸ்தூரியை வைத்து கமல் ஹாஸன் அரசியல் பேசியுள்ளார்.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் வார இறுதி நாட்களுக்காக தான் பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள். காரணம் உலக நாயகன் கமல் ஹாஸன். டிவியில் செய்தி வாசிப்பவர்கள் என்ன உடை அணிகிறார்கள் என்பதை பார்க்க ஒரு கூட்டம் உள்ளது போன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் அணியும் உடைகளை பார்க்கவும் ஒரு பெரிய கூட்டமே உள்ளது.
மேலும் அவர் அரசியல் பன்ச் வசனம் பேசுவதும் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

கமல் ஹாஸன்
ஒரு புதிய வரவு அதனால் ஏற்படும் சலசலப்பு. அது என்ன புதுசா வரதுன்னு. வாழ்க்கையில் ஆகட்டும், அரசியலில் ஆகட்டும் பழையன கழிதலும், புதியன புகுதலும் மிக மிக அவசியம் என்று கமல் மேடையில் தெரிவித்ததும் அங்கிருந்த பார்வையாளர்கள் கை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.

அரசியல்
புதிய வரவு வந்து எல்லா உண்மையையும் புட்டு புட்டு வைக்கிறது. ஏனென்றால் உண்மை தெரியும். நான் இப்பொழுது அகத்தை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறேன் என்று கமல் தெரிவித்ததும் அரங்கமே அதிர்ந்தது. அங்கு புது வரவை தவிர்க்கவே முடியாது. அது சுவாரஸ்யத்தை கூட்டும். ஏற்கனவே இருப்பவர்களுக்கு ஒரு சின்ன மனத்தாங்கல் இருக்கலாம். என்ன பாதியில் வந்துவிட்டு இவங்க பரிசை தட்டிச் சென்றுவிடுவார்கள் என்று. நடக்கும், முயல் ஆமை கதை மாதிரி நடக்கக்கூடும்.

கஸ்தூரி
கஸ்தூரி பெரும் பலத்துடன் வந்திருக்கிறார். அவருக்கு அனைவரை பற்றியும் தெரியும். மக்கள் அவர்களுக்கு என்ன வரவேற்பு அளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரியும். அது அவருக்கு பலமாக இருக்கப் போகிறதா, பலவீனமாக இருக்கப் போகிறதா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஏனென்றால் ரொம்ப தெரிந்து கொண்டால் குழம்பிவிடும் என்றார் கமல்.

அரசியல் மேடை
கமல் மேடையில் புது வரவு என்று பேசியது கஸ்தூரியை பற்றி அல்ல மாறாக அவரின் அரசியல் பிரவேசம் குறித்து தான் என்பது பார்வையாளர்களுக்கு நன்றாக புரிந்துவிட்டது. அவர்களுக்கு புரியாத இடங்களில் கமல் ஹாஸனே நேரடியாக பேசிவிட்டார். கமலின் இந்த அரசியல் பேச்சை பார்க்கத் தான் பலரும் வார இறுதிநாட்களுக்காக காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











