Bigg Boss 3 ஒரேயொரு கேள்வி கேட்டு கவினை அசிங்கப்படுத்திய கமல்

By Siva

சென்னை: உலக நாயகன் கமல் ஹாஸன் கடலை பார்ட்டி கவினை அசிங்கப்படுத்திய ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 வீட்டிற்குள் ஜாலியாக இருக்கும் நபர் கவின் தான். சாக்ஷி, லாஸ்லியா, அபிராமி என்று அனைவரிடமும் கடலை போட்டு பொழுதை போக்குகிறார். இதில் சாக்ஷி மீது அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளதாம். அந்த காதல் எத்தனை நாட்களுக்கு என்று தான் தெரியவில்லை என பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் சிரிக்கிறார்கள்.

கவின் ஜாலியாக இருந்தாலும் அவரின் இமேஜ் கண்டமேனிக்கு டேமேஜாகி இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது பாவம் அவருக்கு தெரியவில்லை.

கவின்

க்ரித்திகா என்கிற பார்வையாளர் கவினை பார்த்து, இந்த பிக் பாஸ் வீட்டில் நீங்கள் யாரை உண்மையாக காதலிக்கிறீர்கள் என்று நச் கேள்வி கேட்டுள்ள ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதற்கு கவினோ, என் மாமா பொண்ணுங்களுடன் எப்படி விளையாடுவேனோ அப்படித் தான் செய்கிறேன் என்றார். அதை கேட்ட கமல், உங்களுக்கு க்ரித்திகா என்கிற பெயரில் மாமா பொண்ணோ, அத்தை பொண்ணோ இல்லையே என்று கேட்டு அசிங்கப்படுத்திவிட்டார்.

கோபம்

கவின் க்ரித்திகாவிடம் தெரிவித்த பதிலை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசியுள்ளனர். 'ஏன் உங்க வீட்ல அக்கா தங்கச்சி கூட எல்லாம் விளையாட கூடாதுனு சொல்லிட்டாங்களா??? #kavin #BiggBoss3 #பிக்பாஸ்' என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த கேள்விக்கும் கவின் கண்டிப்பாக ஒரு பதில் வைத்திருப்பார்.

உதவி

கவினை வைத்து தான் இன்னும் சில வாரங்கள் ஓட்ட முடிவு செய்துவிட்டார் பிக் பாஸ். அதனால் அவரின் இமேஜை சரி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார். கவின் ஒரு சில்ற என்பது தெரியாமல் பிக் பாஸ் இப்படி தேவையில்லாமல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

பிளேபாய்

இதை விட கவினுக்கு பெரிய கேவலம் இருக்காது பாஸ். கவின் சொன்ன பதிலை பார்த்து அந்த மாமாவை பார்க்க வேண்டும் போல் உள்ளதாக பிக் பாஸ் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். கவினால் பாவம் அவரின் மாமாவுக்கும் கெட்டப் பெயர் ஏற்பட்டுள்ளது. இந்த ப்ரொமோ வீடியோவை பார்த்து அந்த மனிதர் நொந்து போயிருப்பார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X