என்ன கமல், இப்படி உண்மையை புட்டுபுட்டு வக்கிறீங்க: பிக் பாஸ் ஒன்னும் சொல்ல மாட்டாரா?
சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் நடப்பது குறித்த உண்மையை பேசியுள்ளார் கமல் ஹாஸன்.
பிக் பாஸ் 3 வீட்டில் உள்ள கவினுக்கும், சாக்ஷிக்கும் இடையே முதலில் காதல் ஏற்பட்டது(ஏற்படுத்தப்பட்டது). அதன் பிறகு அந்த காதல் கதையில் ஒரு திருப்பம் வைத்து முக்கோண காதலாக்கி லாஸ்லியாவை கவினுடன் கோர்த்துவிட்டார் பிக் பாஸ்.
இந்த முக்கோண காதல் கதை கருமத்தை பார்ப்பதற்கு தொலைக்காட்சி சீரியல்களில் வரும் மாமியார், மருமகள் சண்டையையே பார்த்துவிடலாம் என்கிற அளவுக்கு பார்வையாளர்கள் பொறுமையை இழந்துவிட்டனர்.

கவின்
பிக் பாஸ் வீட்டில் நடக்கும் காதலை பார்த்து என்ன கருமம்டா இது. கழுதை, யாரு யாரை காதலிக்கிறார் என்றே தெரியவில்லையே என பார்வையாளர்கள் குழம்பும் அளவுக்கு அங்கு நடந்து கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் நடப்பதற்கு பெயர் காதல் இல்லை இது காதல் ஸ்க்ரிப்ட் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் பார்வையாளர்கள்.

கமல் ஹாஸன்
முக்கோண காதல் என்பது தற்போது முவ்வேறு காதலாக மாறியிருக்கிறது. யார் யாரை காதலிக்கிறீர்கள் என்று கணக்கெடுக்கும் அளவில் உள்ளது. காதல், கண்ணீரை எல்லாம் பார்த்து இளகிக் கொண்டிருந்த நமக்கு காதலாவது, கண்ணீராவது சும்மா இருங்கய்யா என்று சொல்லும் அளவுக்கு பண்ணிவிட்டாங்க என்று பிக் பாஸ் வீட்டில் நடந்தது பற்றிய உண்மையை கமல் பேச அரங்கில் இருந்தவர்கள் விசில் அடித்து, கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.

உண்மை
பிக் பாஸ் வீட்டில் நடப்பதற்கு பெயர் தான் காதல் என்று கமல் சொல்லிவிடுவாரோ என பயந்த நிலையில் அவர் நாம் நினைத்ததையே கூறியது ஆறுதலாக உள்ளது. இதற்காக கமல் ஹாஸனை பாராட்டியே ஆக வேண்டும். கமலே சொல்லிவிட்டார், இனியாவது ஸ்க்ரிப்ட்டை மாற்றுங்க பிக் பாஸ். பார்வையாளர்களுக்கு மட்டும் அல்ல கமலுக்கே அங்கு நடப்பது காதல் தான் என்பது புரியாமல் குழப்பமாக உள்ளது.

ரேஷ்மா
சிலர் பிறரின் பெயரை நாமினேட் செய்ய பயந்து என் பெயரை நாமினேட் செய்துள்ளார்கள் என்று தோன்றியது என ரேஷ்மா கமலிடம் தெரிவிக்க எங்களுக்கும் அப்படித் தான் தோன்றியது என்று கமல் தெரிவித்தார். கமல் ஹாஸன் மீண்டும் மீண்டும் உண்மையே பேசுவது பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. உண்மையை பேசியது எல்லாம் சரி அந்த மீசையை எடுக்காமல் இருந்திருக்கலாம் கமல் சார்.


Click it and Unblock the Notifications