என்னாலேயே முடியாமல் தானே ஜெயிலுக்கு போனேன்: கமலிடம் பம்மிய கவின்
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்து ப்ரொமோ வெளியிடுவார்கள் என்று பார்த்தால் காதல் பஞ்சாயத்து போய்க் கொண்டிருக்கிறது.
பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து கடந்த வாரம் பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் சீனியர்களில் ஒருவர் தான் வெளியேற உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை வெளியாகியுள்ள ப்ரொமோ வீடியோவில் காதல் பஞ்சாயத்து குறித்து பேசப்பட்டுள்ளது.
சந்து கேப்பில் கமல் ஹாஸன் கவினை கிண்டல் செய்துள்ளார்.
தர்ஷன்
நீ மீராவுக்கு ப்ரொபோஸ் செய்தாயா என்று ஷெரின் என்னிடம் வந்து கேட்டார் என தர்ஷன் கமலிடம் கூறும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. தர்ஷன் கூறியதை கேட்ட மீராவோ ஒன்னு சொன்னா அது திரிச்சு திரிச்சு வேறு மாதிரி வெளியே வருகிறது என்று கூற பார்வையாளர்கள் கை தட்டினார்கள். அப்பொழுது கூட மீரா தர்ஷன் சொல்ல வந்ததை முழுதாக சொல்லி முடிக்க விடவில்லை.

கமல்
மீரா, தர்ஷன் கூறியதை கேட்ட கமல் ஹாஸனோ இந்த மாதிரி பிரச்சனைக்கு கவின் தான் சரியான ஆள் என்று தெரிவித்துள்ளார். அதை கேட்ட கவினோ, என் பிரச்சனையையே என்னால் பார்க்க முடியாமல் தான் ஜெயிலிக்கு போயிட்டு வந்திருக்கிறேன் என்று கூற அரங்கத்தில் உள்ள அனைவரும் கைதட்டி சிரித்துவிட்டார்கள்.
தண்டம்
மீரா மிதுன் என்ன பேசினாலும் பார்வையாளர்களுக்கு பிடிப்பது இல்லை. நீங்க பேசுவதை யாரும் திரிச்சு சொல்லவில்லை. சும்மா கமல் சாரிடம் பொய் சொல்லாமல் போய் உருப்படியாக ஏதாவது வேலை பாருங்க. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் தண்டம் என்கிறார்கள் பார்வையாளர்கள்.
பார்வையாளர்கள்
ஆரம்பத்தில் அமைதியாக இருந்த தர்ஷன் தற்போது நச்சென்று பேசுவதால் அதுவும் நியாயமாக பேசுவதால் பார்வையாளர்களுக்கு அவரை மிகவும் பிடித்துள்ளது. தர்ஷனுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக் கொண்டே போகிறது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஒரு சிலர் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் நிலையில் தர்ஷன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











