Bigg Boss 3: கமல் சொல்வதை பார்த்தால் மீரா மிதுன்...

By Siva

சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் உள்ள ரகசிய அறையை பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களா என கமல் ஹாஸன் கேட்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட உள்ளார். முன்னதாக கமல் ஹாஸன் ரகசிய அறைக்கு சென்று சுற்றிப் பார்த்தார். இந்நிலையில் ரகசிய அறை குறித்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் கமல் பார்வையாளர்களை பார்த்து ஒரு கேள்வி கேட்டு அதிருப்தி அடைகிறார்.

ப்ரொமோ வீடியோ

இந்த ரகசிய அறையை பயன்படுத்துவார்கள் என்று உங்களுக்கு தோன்றுதா என கமல் பார்வையாளர்களை பார்த்து கேட்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. ரகசிய அறையை பயன்படுத்தணும்னு நினைக்கிறீர்களா என்று கமல் கேட்க பார்வையாளர்கள் ஆமாம் என்று பதில் அளிக்க உங்களை திருத்தவே முடியாது என்கிறார் உலக நாயகன்.

மீரா மிதுன்

மீரா மிதுன் பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியான நிலையில் அவர் ரகசிய அறையில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இப்படி ஏதாவது ஒன்றை பற்றி பேசி பார்வையாளர்களை நம்ப வைத்துவிட்டு வேறு ஒன்றை செய்வது தான் பிக் பாஸுக்கு கை வந்த கலையாச்சே.

கமல்

மீரா மிதுனை எல்லாம் ரகசிய அறையில் வைக்க வேண்டாம். முதல் வேலையாக விரட்டிவிடுங்க பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி முடிவதற்குள் கமல் ஹாஸன் என் கையை பிடித்து இழுத்தார் என்று புகார் சொல்லாமல் இருந்தால் சரி என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

சரவணன்

கல்லூரியில் படித்தபோது பெண்களை உரசுவதற்காகவே பேருந்தில் பயணம் செய்தேன் என்று சரவணன் கமலிடம் தெரிவிக்க அங்கிருந்த பார்வையாளர்கள் கை தட்டி உற்சாகப்படுத்தினார்கள். அத்தகையைவர்களுக்காக தான் இந்த மீம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X