பிக் பாஸுக்கு காது எல்லாம் கேட்குது போல: நாம் சொன்னதை செஞ்சுட்டார், ஆனால்...

By Siva

சென்னை: தொலைக்காட்சி மூலம் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வைத்துள்ளனர்.

பிக் பாஸிடம் இருந்து போட்டியாளர்கள் மட்டும் அல்ல பார்வையாளர்களாகிய நாமும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது போன்று. பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் தெரிவிக்கும் கருத்துகளையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமூக வலைதளங்களில் பேசப்படுதற்கு ஏற்ப பிக் பாஸ் வீட்டில் மாற்றங்களும் ஏற்படுகிறது.

சரவணன்

சரவணன்

கல்லூரியில் படித்தபோது பெண்களை உரசுவதற்காகவே பேருந்தில் சென்றேன் என்று சரவணன் தெரிவித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சரவணன் அப்படி பேசியும் கமல் ஹாஸன் அவரை கண்டித்து ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே என்ற ஆதங்கம் ஏற்பட்டது. அதை விட சரவணன் கூறியதை கேட்டு பிக் பாஸ் அரங்கில் இருந்த பார்வையாளர்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆதரவாரம் செய்தது தான் கேவலமாக இருந்தது.

சமூக வலைதளம்

சமூக வலைதளம்

கமல் ஹாஸன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கட்டும் ஆனால் பார்வையாளர்கள் என்ற பெயரில் அரங்கில் யாரையும் அமர வைக்க வேண்டாம். சரவணன் செய்த கேவலமான விஷயத்திற்கு கண்டிக்காமல் கைதட்டிய அவர்களை பார்த்தால் எரிச்சலாக உள்ளது. அரங்கில் பார்வையாளர்கள் இல்லாமல் நிகழ்ச்சியை நடத்தவும் என்று கூறி சமூக வலைதளங்களில் பலரும் விளாசினார்கள்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் அரங்கில் இருக்கும் பார்வையாளர்களை மக்கள் விளாசியதை பிக் பாஸ் கவனித்துவிட்டார். அதனால் தான் நேற்று கவின் பெயரை கமல் சொன்னதும் அரங்கில் இருந்த பார்வையாளர்கள் கைதட்டி, பயங்கரமாக வரவேற்பு கொடுக்க கமல் அவர்களை எச்சரித்தார். கவின் பெயரை கேட்டதும் பார்வையாளர்கள் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். நிஜத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை டிவியில் பார்ப்பவர்கள் யாருடா இந்த பார்வையாளர்கள் சரியான கூமுட்டையாக இருக்கிறார்களே என்று கடுப்பாகியுள்ளனர்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

அரங்கில் இருந்தவர்கள் கைதட்டியதை பார்த்த கமல் ஹாஸனோ, நீங்கள் கைதட்டுவதில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். அவரையும் மாட்டி, என்னையும் மாட்டி, நீங்களும் மாட்டிக்கிறீங்க. நீங்கள் இங்கு அலை எப்படி அடிக்கிறதோ அதற்கேற்ப ரியாக்ட் பண்றீங்க, அது நேர்மை தான். இங்கேயும் நேர்மை இருக்கிறது என்று அங்கே இருப்பவர்கள்(நம்மை தான் சொல்கிறார்) புரிந்து கொள்ள வேண்டும். கைதட்டுவது என்பது தொடர்ந்து செய்யுங்கள் என்பதற்காக அல்ல, அட போயா பைத்தியக்காரா என்பதற்கும் கை தட்டுறீங்க. கொஞ்சம் அடக்கி வாசதித்தால் நல்லது என்று நினைக்கிறேன் என பட்டும்படாமலும் கண்டித்துள்ளார் கமல். அவர்கள் நேர்மையாக கை தட்டினால் டிவியில் பார்க்கும் நபர்கள் ஏன் திட்டப் போகிறார்கள் கமல் சார்?. செமயாக கண்டித்துவிட்டீர்கள் போங்க.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X