twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒத்த வார்த்தையால் வனிதாவை அசிங்கப்படுத்திய கஸ்தூரி: இருக்கு இன்று வேடிக்கை இருக்கு

    By Siva
    |

    சென்னை: பிக் பாஸ் ப்ரொமோ வீடியோவில் கஸ்தூரி வனிதாவை அசிங்கப்படுத்தியுள்ளார்.

    பிக் பாஸ் 3 வீட்டிற்கு 17வது போட்டியாளராக கஸ்தூரி சென்ற வேகத்தில் அவர் பின்னாலேயே சென்றுவிட்டார் வனிதா. வனிதா வந்ததால் கஸ்தூரி கிட்டத்தட்ட டம்மியாகிவிட்டார்.

    பாவம், கஸ்தூரியை தான் சக போட்டியாளர்கள் கண்டமேனிக்கு கலாய்க்கிறார்கள், அசிங்கப்படுத்துகிறார்கள்.

    கஸ்தூரி

    கற்பூர குணத்தை பற்றி கமல் ஹாஸன் பேசும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. சாந்தமாக இருந்த தர்ஷனுக்கு எல்லாம் கற்பூரம் போன்று பத்திக் கொள்ளும் குணம் வந்துவிட்டது. கற்பூரத்தன்மை திடீர் என்று எங்கிருந்து வந்தது என்று கமல் ஹாஸன் கேட்க வத்திக்குச்சி உள்ளே வந்துவிட்டதுல்ல சார் என்று கஸ்தூரி தெரிவித்தார். கஸ்தூரியின் பதிலை கேட்டு வனிதாவுக்கு முகமே விளங்கவில்லை.

     வனிதா

    வனிதா

    இன்று வெளியான 2வது ப்ரொமோ வீடியோவில் கமல் ஹாஸன் வனிதாவை வத்திக்குச்சி என்றார். இந்நிலையில் இந்த வீடியோவில் கமல் வார்த்தையையே பயன்படுத்தி வனிதாவை அசிங்கப்படுத்திவிட்டார் கஸ்தூரி. வனிதா அசிங்கப்பட்டதை பார்த்து பிக் பாஸ் அரங்கில் இருந்த பார்வையாளர்கள் மகிழ்ச்சி தாங்காமல் கை தட்டி, விசில் அடித்தார்கள்.

     பார்வையாளர்கள்

    பார்வையாளர்கள்

    வனிதாவின் முகத்தை பார்த்த பார்வையாளர்களோ இன்று இரவு கஸ்தூரிக்கு வேடிக்கை இருக்கு. நமக்கு எல்லாம் நல்ல என்டர்டெயின்மென்ட் இருக்கு என்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் வெளியே இருந்தபோது பட்டு, பட்டுன்னு பேசிய கஸ்தூரி அக்கா பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற பிறகு அமைதியாகிவிட்டது தான் பார்வையாளர்களுக்கு வருத்தமாக உள்ளது. கஸ்தூரி மட்டும் ட்வீட் போடுவது மாதிரி பிக் பாஸ் வீட்டிலும் இருந்தால் வனிதா எல்லாம் எம்மாத்திரம் என்கிறார்கள்.

     மைண்ட் வாய்ஸ்

    மைண்ட் வாய்ஸ்

    கஸ்தூரி அக்கா மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து வனிதாவை பற்றி சத்தமாக பேசிவிட்டார்கள். வனிதா இன்று பேயாட்டம் ஆடப் போகிறார். கஸ்தூரியின் நிலையை நினைத்தால் பாவமாகத் தான் உள்ளது. கஸ்தூரி, வனிதாவை மோத வைத்து இந்த வாரத்தை ஓட்டிவிடுவார்கள் போன்று என்று பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Kasthuri has insulted Vanitha in the third promo video of Bigg Boss 3.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X