சாக்ஷியிடம் காதலை சொன்ன கவின்: இன்று இரவு அபிராமி பேயாட்டம் தான்
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வீட்டில் ஒரு வழியாக ஒரு காதல் ஜோடி உருவாகிவிட்டது.
பிக் பாஸ் வீடு என்றால் ஒரு காதல் ஜோடியை உருவாக்கியே ஆக வேண்டும். இந்த சீசனில் அபிராமியும், கவினும் காதலிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. காரணம் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த முதல் நாளே கவின் மீது அபிராமிக்கு காதல் வந்துவிட்டது.
கவினோ அபிராமிக்கு பதில் சாக்ஷி மீது ஆர்வமாக உள்ளார்.(சாக்ஷி மீது மட்டுமா?)
சாக்ஷி
கவின் சாக்ஷியை காதலிப்பதை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதாவது தான் திருமணம் செய்ய விரும்பும் பெண்ணுக்கு இருக்க வேண்டிய குணங்கள் சாக்ஷிக்கு இருப்பதாக கவின் தெரிவித்துள்ள ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. கவின் சொன்னதை கேட்டு சாக்ஷியும் வெட்கப்பட்டு சிரிக்கிறார். ஆனால் இந்த பிக் பாஸ் வீட்டு காதலை நம்ப முடியாதே. மேலும் கடலை பார்ட்டி கவினையும் நம்ப முடியாது என்று விமர்சனம் எழுந்துள்ளது.
லாஸ்லியா
கவின் சாக்ஷியை கல்யாணம் எல்லாம் பண்ண மாட்டார். இது சும்மா பிக் பாஸ் வீட்டில் இருக்கும் வரைக்கு பொழுது போக உருவாகியுள்ள காதல். கவினுக்கு அபிராமி மீதும் ஒரு கண் உள்ளது. மேலும் லாஸ்லியாவை கரெக்ட் பண்ணவும் முயற்சி செய்து வருகிறார். சாக்ஷியிடம் காதலை சொன்னது அபிராமியை கடுப்பேற்றக் கூட இருக்கும் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
காதல்
கவின் எப்பொழுது பார்த்தாலும் கடலை போடுவதும், அவரும், சாக்ஷியும் காதல் என்று பேசுவதும் பிக் பாஸுக்கு வேண்டுமானால் சுவாரஸ்யமாகத் தெரியலாம். ஆனால் அதை பார்ப்பவர்கள் துப்பாத குறையாக திட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஸ்க்ரிப்ட்டை மாத்துங்க பிக் பாஸ் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பெண்கள்
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மொரட்டு பெண்களை தவிர்த்து மற்ற அனைவரிடமும் கடலை போடுகிறார் கவின். இந்நிலையில் பெண் வேடமிட்ட மோகன் வைத்யாவை தவிர மற்ற அனைத்து பெண்களிடமும் கவின் காதலை சொல்லிவிட்டதாகக் கூறி நெட்டிசன்கள் சிரிக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











