twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Bigg Boss 3: கவினுக்கு பெருசா ஆப்பு வைத்த பிக் பாஸ்- நீங்களே பாருங்க

    By Siva
    |

    சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் கவினுக்கு டாஸ்க் என்ற பெயரில் ஆப்பு வைத்துள்ளார்கள்.

    பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் கவின் மீது அபிராமிக்கு ஈர்ப்பு உள்ளது அனைவருக்கும் தெரியும். ஆனால் கவினுக்கு சாக்ஷி மீது அக்கறை இருப்பதாக ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

    மேலும் இன்னும் சில நாட்களில் முக்கோண காதல் கதை உருவாகும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ப்ரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

    டாஸ்க்

    ப்ரொமோ வீடியோவில் கவினுக்கு வாயை மூடி பேசவும் என்கிற டாஸ்க் கொடுப்பதாக காட்டுகிறார்கள். அதாவது கவின் நாள் முழுவதும் தனது கேர்ள் பிரண்டிடம் சைகையால் மட்டுமே பேச வேண்டுமாம். அபிராமி, சாக்ஷி, ஷெரின், ரேஷ்மா, லாஸ்லியா, வனிதா ஆகியோரிடம் சைகையில் பேச வேண்டுமாம். வனிதா கேர்ள் பிரெண்டா பிக் பாஸ்?

    வனிதா

    யோவ் பிக் பாஸ் வனிதா எல்லாம் கவினுக்கு கேர்ள் பிரெண்டாய்யா. செத்தான்டா சேகரு என்கிறார்கள் நெட்டிசன்கள். சிலரோ கவின் தயவு செய்து இந்த வாயை மூடி பேசவும் டாஸ்க்கை தினமும் செய்யுங்கள். இல்லை என்றால் உங்களை தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து முதலில் வெளியேற்றுவார்கள் என்கிறார்கள்.

    செம

    கவின் பிளேபாய் என்பதை பிக் பாஸ் நன்றாக புரிந்து வைத்துள்ளார். அதனால் தான் அவருக்கு இப்படி ஒரு டாஸ்க் கொடுத்துள்ளார் என்று விமர்சனம் எழுந்துள்ளது. சிலரோ, ஏய்யா பிக் பாஸ் வாயை மூடி பேசவும் என்று தானே நீங்கள் சொன்னீர்கள் என்று அந்த பய கவின் வில்லங்கமாக ஏதாவது செய்துவிடப் போகிறார் என்று சிலர் எச்சரித்துள்ளனர்.

    கோபம்

    கோபம்

    பிக் பாஸ் வீட்டில் திரும்பும் பக்கம் எல்லாம் கேமரா வைத்து என்ன புண்ணியம். எங்க தலைவி லாஸ்லியாவை ஒழுங்காகவே காட்ட மாட்டேன் என்கிறீர்கள். விளம்பரம் தான் அதிகமாக ஓடுகிறது. இதை நாங்கள் கண்டிக்கிறோம் என்று லாஸ்லியா ஆர்மி கோபப்பட்டுள்ளது. ஆரவ், காயத்ரி போன்று இந்த சீசனில் வனிதாவும், கவினும் நல்ல அக்கா, தம்பியாக இருப்பார்கள் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Bigg Boss 3 contestant Kavin has been given a difficult task today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X