லாஸ்லியாவை தேர்வு செய்து சாக்ஷிக்கு ஆப்பு வைத்த கவின்
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கவின் லாஸ்லியாவை தேர்வு செய்து சாக்ஷியை கண்டுகொள்ளவில்லை.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கி 50 நாட்கள் ஆகிவிட்டது. இன்று இரவு எந்த போட்டியாளர் வெளியேற்றப்படப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர்.
இந்நிலையில் வெளியாகியுள்ள ப்ரொமோ வீடியோவில் கமல் ஹாஸன் வேறு விஷயம் பற்றி பேசுகிறார்.
கமல்
போட்டியாளர்களை பார்த்து டாப் 3 இடங்களை யாருக்கு கொடுப்பீர்கள் என்று கமல் கேட்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. கமல் கேட்டதும் கவின் பதில் அளித்ததாவது, தர்ஷனுக்கு முதலிடம், லாஸ்லியாவுக்கு இரண்டாவது இடம், சாண்டிக்கு மூன்றாவது இடம் என்று தெரிவித்துள்ளார்.

அபிராமி
கவினை போன்றே அபிராமியும் தர்ஷனுக்கே முதலிடத்தை கொடுத்துள்ளார். 19 வயது வரை ஒரு பையன் அனைத்து கஷ்டங்களையும் பார்த்து அதையும் தாண்டி இங்கு வந்து நல்லா பண்ணும்போது அவருக்கு தான் முதலிடம் கொடுக்க வேண்டும் என்று அபிராமி கமலிடம் தெரிவித்துள்ளார். மக்கள் மனதில் ஏற்கனவே தர்ஷனுக்கு சிறப்பு இடம் கிடைத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தர்ஷன்
தர்ஷனுக்கு தான் முதலிடம் கொடுக்க வேண்டும் என்று கவின், அபிராமியை போன்றே பார்வையாளர்களும் தெரிவித்துள்ளனர். பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற நாளில் இருந்து இதுவரை அவர் தன்மையாக நடந்து கொண்டு வருகிறார். அதனால் தான் பார்வையாளர்களுக்கு தர்ஷனை மிகவும் பிடித்துள்ளது.

பாராட்டு
கவின் தன் பெயரை சொல்லாமல் தர்ஷனுக்கு முதலிடம் கொடுத்தார் பாருங்க அது தான் அவருக்கு இருக்கும் பெரிய மனதை காட்டுகிறது என்று அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். மக்களிடம் தனக்கு ஆதரவு இல்லை என்பது தெரிந்து தான் கவின் தன் பெயரை தெரிவிக்கவில்லை என்கிறார்கள் மற்றவர்கள்.


Click it and Unblock the Notifications











