கவின், சாக்ஷி, அபி-முடியல கமல் சார்: நீங்க பிக் பாஸுக்கும் மேல

By Siva

சென்னை:பிக் பாஸ் 3 வீட்டில் உள்ளவர்களில் யாரை காப்பாற்றலாம் என்று கேட்கிறார் கமல் ஹாஸன்.

பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து இன்று இரவு யார் வெளியேற்றப்படுவார் என்பது குறித்த ப்ரொமோ வீடியோ வெளியாகும் என்று பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள்.

இந்நிலையில் இன்று வெளியான 3 ப்ரொமோ வீடியோக்களிலும் எவிக்ஷன் பற்றி கமல் பேசவே இல்லை.

கமல்

மூன்றாவது ப்ரொமோ வீடியோவிலாவது கமல் ஹாஸன் எவிக்ஷன் பற்றி கூறுவார் என்று எதிர்பார்த்தால் அவர் யாரை காப்பாற்றலாம் என்று கேட்க அங்கிருந்தவர்களோ கவின் என்று கூறும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் அபிராமி வாராவாரம் நாமினேஷனில் இருப்பது குறித்தும் பேசியுள்ளார் கமல்.

சந்தேகம்

கமல் ஹாஸன் ஏதாவது கேட்டால் பதில் சொல்லும் அந்த பார்வையாளர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. பெண்களை உரச பஸ்ஸில் சென்றேன் என்று சரவணன் கூறியதை கேட்டு கை தட்டி பாராட்டிய அந்த புண்ணியவான்களை எல்லாம் அருங்காட்சியகத்தில் தான் வைக்க வேண்டும். என்ன ஒரு கேவலமான ஆடியன்ஸ் என்று நெட்டிசன்கள் திட்டுகிறார்கள்.

சாக்ஷி

சாக்ஷி

கவினை காப்பாற்ற வேண்டும் என்று ஆடியன்ஸ் கோரஸாக சொல்லவில்லை சொல்ல வைக்கப்பட்டுள்ளனர் என்று சமூக வலைதளங்களில் பேசிக் கொள்கிறார்கள். கவின் இருந்தால் தானே முக்கோண காதலை கதையை ஓட்ட முடியும். அதனால் அவரை காப்பாற்றுகிறார் பிக் பாஸ் என்று விமர்சனம் எழுந்துள்ளது.

பிக் பாஸ்

பிக் பாஸ்

சஸ்பென்ஸ் வைத்து பார்வையாளர்களை கடுப்பேற்றி பார்ப்பதில் தான் இந்த பிக் பாஸுக்கு என்ன ஒரு ஆனந்தம். எவிக்ஷன் பற்றியே பேசாமல் இருந்துவிட்டு இன்று இரவு ஒருவரை வெளியேற்றுவார் போன்று. பிக் பாஸ் அந்த மீரா மிதுனை மட்டும் ரகசிய அறைக்கு அனுப்பீர்கள் என்றால் அவ்வளவு தான் என்று பார்வையாளர்கள் எச்சரித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X