மீ டூ, எல்லாம் முடிஞ்சு போச்சு: அழுது கொண்டே நடையை கட்டிய லாஸ்லியா

By Siva

Recommended Video

Bigg Boss 3 Tamil: Day 25 : Promo 2: கவினால் கதறி அழும் லாஸ், சாக்ஷி- வீடியோ

சென்னை: கவினும், லாஸ்லியாவும் ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து செல்லும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் கவினை வைத்து பெரிய அளவில் காதல் டிராமா போடுகிறார்கள். கவினுக்கு காதல் அடிக்கடி வருவதும் போவதுமாக உள்ளது. பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு 2 நாளைக்கு ஒரு காதல் வருகிறது என்று வனிதா விஜயகுமார் கூட தெரிவித்தார்.

இந்நிலையில் தான் காதல் முறிவது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

கவின்

ப்ரொமோ வீடியோவில் நீ பண்ணது தப்பு கவின் பெரிய தப்பு, மத்தவங்க ஃபீலிங்ஸுடன் விளையாடுவது தப்பு. நீ என்னுடன் கதைப்பது கூட நடிக்கிறது மாதிரி இருக்கு. எல்லாம் என்னால் நடந்தது போன்று இருக்கு, பைத்தியக்காரி மாதிரி நான் நடந்திருக்கிறேன் என்று லாஸ்லியா கூறுகிறார். அதை கேட்டு ஐ ஆம் டன் என்று கவின் சொல்ல லாஸ்லியாவோ மீ டூ என்று சொல்லிவிட்டு கிளம்பிச் செல்கிறார்.

திட்டு

திட்டு

போங்கய்யா நீங்களும் உங்கள் காதலும். வெளியே காதலி இருப்பாராம், பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற இடத்தில் வாரத்திற்கு ஒருவரை காதலிப்பார்களாம். அதன் பிறகு பிரிந்து செல்வார்களாம். பார்க்கவே கேவலமாக இருக்கிறது பிக் பாஸ். இந்த கருமத்திற்கு தொலைக்காட்சி சீரியலே எவ்வளவு மேல் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

ப்ரொமோ

கவின், லாஸ்லியா பிரிந்துவிட்டார்கள் என்று மட்டும் நாங்கள் நம்பவே மாட்டோம். ப்ரொமோ வீடியோவில் ஒன்றை காட்டிவிட்டு நிஜத்தில் வேறு ஒன்றை காட்டி ஏமாற்றுவதே இந்த பிக் பாஸுக்கு வேலையாகிவிட்டது. ப்ரொமோ வீடியோவே இந்த அளவுக்கு மொக்கையாக இருந்தால் இன்று இரவு நிகழ்ச்சி எப்படி கொடூரமாக இருக்கும் என்று பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நடிப்பு

ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் லாஸ்லியாவின் நடிப்பு நன்றாக இல்லை என்றும், அவருக்கு அப்பா சேரனை தவிர வேறு யாரும் பட வாய்ப்பு தர மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் பெண்களின் ஃபீலிங்குடன் விளையாடும் கவினை திட்டுகிறார்கள். வனிதா திரும்பி வந்தால் மட்டுமே பிக் பாஸ் நிகழ்ச்சி நன்றாக இருக்கும். அதனால் ஒயில்டு கார்டு மூலம் அவரை அழைத்து வர வேண்டும் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X