அறிவில்ல, சும்மா கத்தாத: மீரா மிதுனை திட்டிய கவின், மோகன் வைத்யா
Recommended Video
சென்னை: மீரா மிதுனை கவின் மற்றும் மோகன் வைத்யா திட்டுவது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் ப்ரொமோ வீடியோக்களில் மதுமிதாவையே காட்டி பார்வையாளர்களை கடுப்பேற்றினார்கள். இந்நிலையில் மீரா மிதுன் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் பிக் பாஸ்.
நெட்டிசன்கள் மீரா மிதுனை அதிகமாக விளாசுவதை பார்த்துவிட்டு அவரை வைத்து ப்ரொமோ வீடியோ வெளியிட்டுள்ளார்கள் போன்று.

மீரா மிதுன்
உதவி செய்யக் கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கு தெரியும்ல என்று கவின் கத்த, நான் மறைமுகமாகத் தான் உதவி செய்து கொண்டு இருந்தேன் என்று மீரா மிதுன் பதில் அளிப்பது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவக் கூடாது என்று ரூல்ஸ் படிச்சவன் நான், எனக்கு தெரியாதா என்று கவின் சீறுகிறார்.

அறிவு இல்லையா?
கவின் கத்தியதை பார்த்த மீரா மிதுன் நீ பேசாத என்று கூற அவரோ, உனக்கு அறிவு இருந்தால் இன்னொருவாட்டி ரூல்ஸை படிச்சுட்டு போ, சும்மா உன்னிடம் வந்து பிரச்சனை பண்ணல, ஆசையும் கிடையாது என்று கவின் கோபமாக கூறுகிறார். இதையடுத்து வயசு வித்தியாசம் பார்த்து பேசு மீரா, நான் சொல்றேன், எல்லார்கிட்டயும் கத்துற மாதிரி கத்துற, வயசுக்கு மரியாதை கொடு என்று மோகன் வைத்யாவும் மீராவிடம் கோபப்படுகிறார்.

கடல மாம்ஸ்
இந்த ப்ரொமோ வீடியோவை பார்த்ததும் கடல பார்ட்டி கவின், மோகன் வைத்யா ஆகியோர் மீரா மிதுனுடன் மோதினார்கள் என்று மட்டும் யாரும் நம்பத் தயாராக இல்லை. பரபரப்பை ஏற்படுத்த ப்ரொமோ வீடியோவில் ஒன்றை காட்டி, நிகழ்ச்சியில் வேறொன்றை காட்டி ஏமாற்றுவதற்கு பெயர் போனவர் பிக் பாஸ் என்பதை அனைவரும் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே.
நெட்டிசன்கள்
கவின், மோகன் வைத்யா மீரா மிதுனை திட்டியதை பார்த்த நெட்டிசன்கள் யார், யார் எல்லாம் ரூல்ஸ் பற்றி பேசுவது என்று விவஸ்தை இல்லாமல் போச்சு. அதென்ன கவினுக்கு மீரா மீது மட்டும் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. சாக்ஷி, அபி, லாஸ்லியா மீது கோபப்படச் சொல்லுங்க பார்ப்போம் என்று தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











