கவின், முகென் ராவை ஃபீல் பண்ணி கண் கலங்க வைத்த 2 பெண்கள்

By Siva

சென்னை: கவின், முகென் ராவ் கண் கலங்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் கவின் பார்வையாளர்களுக்கு பிடிக்காத போட்டியாளராக ஆகியுள்ளார். வெளியே காதலி இருக்கும் நிலையில் பிக் பாஸ் வீட்டில் முதலில் சாக்ஷி அடுத்து லாஸ்லியா என்று இரண்டு பெண்களுடன் காதல்.

பிக் பாஸ் முக்கோண காதல் கதை ஸ்க்ரிப்ட் கொடுத்தாலும் அதை அப்படியேவா ஏற்பது என்று பார்வையாளர்கள் விளாசியுள்ளனர்.

கண்ணீர்

கண்ணீர்

கலை உலக நாயகனாக வளர வாழ்த்துக்கள். வாய்ப்பு கொடுக்க மறுத்தவர்கள் முன் நீ வாழ்ந்து காண்பித்தால் மட்டும் பத்தாது, வளர்ந்தும் காண்பிக்க வேண்டும் என்கிற பெண் குரலை கேட்டு கவின் கண் கலங்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. கவின் அழுதால் நாங்கள் அப்படியே உருகிவிடுவோம் என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டீர்கள் பிக் பாஸ் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

முகென் ராவ்

முகென் ராவ்

முகென் ராவின் ஆசிரியையின் குரல் ப்ரொமோ வீடியோவில் கேட்கிறது. வகுப்பில் ஏதாவது செய்துவிட்டு ஆசிரியர் என் அறைக்கு அவரை அனுப்பிவிடுவார். அவர் ஏன் அடிக்கடி இப்படி வருகிறார் என்று பார்த்துபோது அவர் அன்பை தான் தேடி வந்தார் என்கிற அந்த பெண்ணின் குரலை கேட்டதும் முகென் ராவுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்துவிட்டது.

ஆறுதல்

ஆறுதல்

கவின் கண் கலங்கியதை பார்த்த அவரின் ஆதரவாளர்கள்(நீ பார்த்த என்று கேட்க வேண்டாம், நிஜமாகவே ஆதரவாளர்கள் உள்ளனர்) ஆறுதல் கூறியுள்ளனர். எத்தனை எதிர்ப்பு வந்தாலும் கலங்காமல் தைரியமாக இருப்பதுடன், உண்மையாக இருக்கும் ஒரே போட்டியாளர் கவின் என்கிறது அவரின் ஆர்மி. வெளியே வந்து பாருங்க கவின், உங்களுக்கு நிறைய ஆதரவாளர்கள் உள்ளனர் என்கிறார்கள் அவர்கள்.

கமல்

கவின் வார நாட்களில் எப்படி இருப்பார், வார இறுதி நாட்களில் எப்படி இருப்பார் என்று மீம்ஸ் போட்டுள்ளனர். அப்படிப் பார்த்தால் போட்டியாளர்கள் அனைவருமே கமல் ஹாஸனை பார்த்துவிட்டால் பல்லை, பல்லை காண்பித்து பம்மத்தானே செய்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X