Bigg Boss 3 எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க: குமுறிக் குமுறி அழுத கவின்

By Siva

Recommended Video

Bigg Boss 3 Tamil : Day 25 : Promo 3 : கவின் செய்வது சரியா?.. தவறா?- வீடியோ

சென்னை: கவின் கதறி அழும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 வீட்டில் நிரந்தரமாக இருந்துவிடப் போவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார் கவின். சாக்ஷி, லாஸ்லியா ஆகியோருடன் நெருங்கிப் பழகி அவர்களை அழ வைக்கிறார்.

இந்நிலையில் கவின் தான் செய்த செயல்களுக்காக மன்னிப்பு கேட்டு அழுதுள்ளார்.

கவின்

என் தப்பு என்ன என்பதை நான் உணர்ந்துவிட்டேன். ஒவ்வொருத்தரிடமும் ஒவ்வொரு பழக்கத்துடன் நான் பழகியிருக்கிறேன். அது நேற்று இரவில் இருந்து என்னை தாக்குகிற மாதிரி இருந்துச்சு. அதனால் அனைவரிடமும் சாரி சொல்ல விரும்புகிறேன் என்று கூறி கவின் கதறிக் கதறி அழும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. கவின் பேசும்போது லாஸ்லியா கவலையாக இருப்பது போன்று முகத்தை வைத்திருந்தார். ஆனால் கவின் அழுவதை பார்த்து பார்வையாளர்கள் அவர் மீது பாவப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காதல்

கவின் கதறி அழுவதற்கு ஓ மனமே பிஜிஎம்மா பிக் பாஸ். உங்களின் பிஜிஎம் தேர்வில் தீயை வைக்க. கவின் செய்வதை விட இந்த பிஜிஎம் தான் ஓவராக உள்ளது என்று பார்வையாளர்கள் கடுப்பாகிறார்கள். இந்த ப்ரொமோ வீடியோவை பார்த்தால் நடிகர் ஆர்யாவே கடுப்பானாலும் கடுப்பாகிவிடுவார்.

கண்ணீர்

அழ வேண்டியது நீங்க இல்லை கவின். நாளுக்கு ஒரு பெண்ணை காதலித்து, கடலை போட்டு, மொக்கை போட்டு, மொக்கை வாங்கி நீங்கள் செய்த அனைத்து கொடுமையையும் பொறுமையுடன் பார்த்த பிக் பாஸ் 3 பார்வையாளர்கள் தான் கதறிக் கதறி அழ வேண்டும். இந்த மூஞ்சியை எல்லாம் நான் காதலிக்க மாட்டேன் என்று சாக்ஷி வனிதாவிடம் கூறிவிட்டு அவருக்காக அழுது கூப்பாடு போடுவது எல்லாம் குடுத்த காசுக்கு மேல கூவும் மொமன்ட்.

வனிதா

பிக் பாஸ் வீட்டில் உருவாகும் காதல் எல்லாம் போலி, போட்டியாளர்கள் போலியாக இருக்கிறார்கள் என்ற உண்மையை சொல்லிய வனிதா சாக்ஷியின் முகத்திரையையும் கிழித்துவிட்டார். இது தெரியாமல் அந்த சாக்ஷி கவினை காதலிப்பது போன்று சீன் போட்டுக் கொண்டிருக்கிறார். ரீல் அந்து 5 நாள் ஆகிவிட்டது சாக்ஷி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X