Bigg Boss 3 இவ போதைக்கு நான் ஊறுகாயா?: மீரா- வனிதா மோதல், அழுகை
Recommended Video
சென்னை: நேற்று மட்டும் அல்ல இன்றும் மீரா மிதுனை அழ வைத்து ப்ரொமோ வீடியோ வெளியிட்டுள்ளனர்.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் நேற்று முன்தினத்தில் இருந்து யாராவது அழுது கொண்டே இருக்கிறார்கள். நேற்று வெளியான 3 ப்ரொமோ வீடியோக்களில் இரண்டு அழுகாச்சி வீடியோ.
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரொமோ வீடியோவே அழுகாச்சி வீடியோவாக உள்ளது.
மாத்தாதீங்க மாத்தாதீங்க.. ரோகிணிதான் எங்களுக்கு வேண்டும்.. கிளம்பியது டிவீட்டுகள்!
மீரா
என்னை ஒரு நாளைக்கு ஒரு தடவை அழ வைக்கவில்லை என்றால் இவங்க யாருக்குமே தூக்கம் வராது என்று மீரா மிதுன் அழுது கொண்டே முகென் ராவ் மற்றும் சாண்டி மாஸ்டரிடம் தெரிவிக்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. மீரா மிதுன் ஒரு புறம் அழ மறுபுறம் வனிதா விஜயகுமாரோ, இவ போதைக்கு நான் ஊறுகாய் கிடையாது என்கிறார்.

வனிதா விஜயகுமார்
எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு என்று மீரா கூற, கொடுக்க வேண்டிய இடத்தில் கரெக்டா கொடுப்பேன் நான் என்று வனிதா சீறுகிறார். மீரா மிதுனை கட்டிப்பிடித்து சாக்ஷி ஆறுதலாக உள்ளார். நான் இந்த வீட்டிற்கு வந்ததில் இருந்து எவ்வளவு வேலை செய்தேன் என்று இந்த கேமராவுக்கு தெரியும் என்கிறார் மீரா.

மோதல்
நமக்கு எல்லாம் பேக்கிரவுண்டு இல்லையா, பாப்புலாரிட்டி இல்லையா என்று வனிதா தனியாக குமுறுகிறார். இதையடுத்து மீரா மிதுனோ இப்படி எல்லாம் என்னால் இருக்க முடியாது. அது என் கேரக்டரே இல்லை என்கிறார். மீரா மிதுனை அழைத்து வந்தால் வனிதா நிச்சயம் மோதுவார் என்று பிக் பாஸ் போட்ட கணக்கு ஒர்க்அவுட் ஆகிவிட்டது.

நெட்டிசன்கள்
ப்ரொமோ வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கூறுவதாவது, பாவம் நாட்டாமை குடும்பம். வனிதாவின் மோதல்களை பார்த்து அவர்கள் கஷ்டப்படுவார்கள். சும்மா சும்மா மீரா மிதுனையை காட்டி எரிச்சல் அடைய வைக்க வேண்டாம் பிக் பாஸ். வனிதா முழுதாக காயத்ரி ரகுராமாகவே மாறிவிட்டார். சாக்ஷி மீரா மிதுனுக்கு ஆறுதல் சொல்வது ஆச்சரியமாக உள்ளது என்கிறார்கள். மேலும் பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் ஆண்கள் யாருமே சண்டை போடாதது ஆறுதலாக உள்ளது என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











