Bigg Boss 3 வம்பிழுத்த மீரா: லெஃப்ட் அன்ட் ரைட் கொடுத்த சேரன்

By Siva

Recommended Video

Bigg Boss 3 Tamil : Day 17 : Promo 1: சேரன் கோவத்தில் இப்படி பண்ணிட்டாரே- வீடியோ

சென்னை: மீரா மிதுன் தேவையில்லாமல் பேசி சேரனிடம் திட்டு வாங்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் மீரா மிதுன் வேலை செய்யாமல் டிமிக்கி கொடுப்பதாக ஏற்கனவே புகார் எழுந்தது. அதற்கு அவரோ நான் வேலை செய்கிறேன் என்பதற்கு இந்த வீட்டில் உள்ள கேமராக்கள் தான் சாட்சி என்றார்.

இந்நிலையில் மீண்டும் வேலை தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

சேரன்

நான் வேலை செய்யாமல் எஸ்கேப் ஆகிறதையே வேலையாக வைத்துக் கொள்கிறேன் என்று ஒரு வார்த்தை விட்டீங்க என்று மீரா கூற சேரன் மன்னிச்சுக்கோ என்றார். இதையடுத்து மீரா மறுபடியும் ஆரம்பிக்க சேரன் கோபம் அடைந்து நானா பிரச்சனையை துவங்கினேன், உன்னிடம் வந்து சொல்லிவிட்டு போனேன், பிரச்சனையை துவங்கியது யார், அடுத்தவங்களிடம் பேசுனது யார் என்று கத்தினார். இதையடுத்து மீரா அங்கிருந்து வெளியே செல்வது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

ஆதரவுகள்

ஆதரவுகள்

சேரன் கோபப்பட்டு திட்டியதில் தவறு இல்லை. இந்த மீரா மிதுன் வேலை செய்யாமல் இருந்து கொண்டு சும்மா சீன் கிரியேட் பண்ணுகிறார். அவருக்கு எல்லாம் இப்படித் தான் லெஃப்ட் அன்ட் ரைட் கொடுக்க வேண்டும். அப்படி இருந்தும் அவருக்கு இதெல்லாம் மண்டையில் ஏறாது என்கிறார்கள் நெட்டிசன்கள்.

பிக் பாஸ்

மீரா மக்களிடையே சிம்பதி கிரியேட் பண்ணத் தான் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார். லாஸ்லியா, தர்ஷன், முகென் ராவிடமும் இப்படித் தான் செய்தார். தற்போது சேரனிடம் மோதுவதும் சிம்பதி கிரியேட் பண்ணி எல்லோரும் என்னையே டார்கெட் செய்கிறார்கள் என்று கூறி நீலிக் கண்ணீர் வடிக்கத் தான் என்று பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புகார்

மீரா மிதுன் எப்பொழுது பார்த்தாலும் புகார் தெரிவித்துக் கொண்டே இருக்கிறார். இல்லை என்றால் நீலிக் கண்ணீர் வடித்து டிராமா போடுகிறார். அவரை பார்க்கவே எரிச்சலாக இருக்கு பிக் பாஸ். முதலில் வீட்டை விட்டு வெளியேற்றுங்கள் என்று பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X