பிக் பாஸ் வீட்டின் மன்மதன் யார்னு சரியா சொல்லுங்க பார்ப்போம்?

By Siva

சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் மோகன் வைத்யா செய்வதை எல்லாம் பார்க்கும்போது கவின் நல்லவர் இல்லை இல்லை ரொம்ப நல்லவர் என்று சொல்லலாம் போன்று.

பிக் பாஸ் 3 வீட்டிற்கு மோகன் வைத்யா செல்கிறார் என்ற தகவல் அறிந்ததுமே பார்வையாளர்கள் புலம்பத் துவங்கினார்கள். அவருக்கு வயதாகிவிட்டதே, எப்படி டாஸ்க் செய்வார் என்று கேட்டார்கள்.

கடந்த வாரம் மோகன் வைத்யா அல்லது சித்தப்பு சரவணன் வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் தான் வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டார். எவிக்ஷன் துவங்கியதில் இருந்தே ஞாயிற்றுக்கிழமை வந்தால் மோகன் வைத்யா வெளியேறுவார் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைகிறார்கள் பார்வையாளர்கள். இந்நிலையில் மோகன் வைத்யாவை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ் போடுகிறார்கள்.

மோகன் வைத்யா

மோகன் வைத்யா தான் அப்பா போன்று என்று கூறி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண் போட்டியாளர்களை கட்டிப்பிடிக்கிறார், முத்தம் கொடுக்கிறார், தன் கன்னத்தில் முத்தம் கொடுக்குமாறு கேட்டு வாங்குகிறார். பெண் போட்டியாளர்களும் அவர் வயதானவர் தானே என்று முத்தமிடுகிறார்கள். இதை பார்க்கும் பார்வையாளர்களோ பிக் பாஸ் வீட்டின் மன்மதன் மோகன் வைத்யா என்கிறார்கள்.

கவின்

கவின், லாஸ்லியா, சாக்ஷி ஆகியோரை வைத்து முக்கோண காதல் கதை டிராக்கை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பதாக நினைக்கிறார் பிக் பாஸ். ஆனால் இவன் வேற நம்மை ரொம்ப டார்ச்சர் பண்றானே என்று பார்வையாளர்கள் புலம்புவது பிக் பாஸுக்கு தெரியவில்லை. கவின், லாஸ்லியா, சாக்ஷியை பார்த்தாலே பார்வையாளர்கள் கதறுகிறார்கள். சீக்கிரமாக இதை முடிஞ்சுவிடுங்க பிக் பாஸ்.

கலாய்

கவினுக்கு லாஸ்லியாவும் வேண்டும், சாக்ஷியும் வேண்டும். சாக்ஷியை சமாதானம் செய்ய முயற்சி செய்யும் கவின் லாஸ்லியாவுடனும் சமரசம் செய்ய விரும்புகிறார். கவினின் நிலைமையை இதை விட அழகாக மீம்ஸ் போட்டுக் காட்ட முடியாது. அபிராமி தனக்கு செட்டாகாது என்று நினைத்துவிட்டார் போன்று. அதனால் தான் முதலில் காதலை சொன்ன அபிராமியை டீலில் விட்டுவிட்டார் கவின்.

முடியல சாமி

இந்த கவின், லாஸ்லியா, சாக்ஷி ஆகியோரின் காதல் கதையை பார்த்தாலே கோபம் தான் வருகிறது பிக் பாஸ். இதில் இதய வடிவில் சப்பாத்தி சுட்டு காதலை சொல்வது வேறா?. ஸ்க்ரிப்ட் எழுதுபவரை முதலில் மாத்துங்க பிக் பாஸ் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X