twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Bigg Boss 3 எந்தநேரம் அத்தை நீ செத்தேன்னு சொன்னாரோ முகென், நடந்துடுச்சு

    By Siva
    |

    சென்னை: முகென் ராவ் எந்த நேரம் பார்த்து ரேஷ்மாவை நாமினேட் செய்தாரோ அவர் வெளியேற்றப்பட்டுவிட்டார்.

    பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் ஒரு போட்டியாளர் இன்று வெளியேற்றப்படுவார் என்பது அனைவருக்கும் தெரியும். முகென் ராவ் ரேஷ்மாவை பார்த்து அத்தை நீ செத்த என்று கூறி அவரை நாமினேட் செய்தார்.

    கடலை பார்ட்டி கவின், சாக்ஷி ஆகியோரும் தான் நாமினேட் செய்யப்பட்டார்கள். அவர்களை பார்வையாளர்களுக்கு மட்டும் அல்ல சக போட்டியாளர்களுக்கும் கூட பிடிக்கவில்லை.

    கவினுடன் சேர்ந்த பாவத்திற்கு கக்கூஸ்லியாவான லாஸ்லியா கவினுடன் சேர்ந்த பாவத்திற்கு கக்கூஸ்லியாவான லாஸ்லியா

    ரேஷ்மா

    ரேஷ்மா

    பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற பிறகு முதல்முறையாக நாமினேட் செய்யப்பட்ட ரேஷ்மா வெளியேற்றப்பட்டுவிட்டார். ஆம், அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பி தன் வீட்டிற்கு சென்றுவிட்டார். முகென் ராவ் விளையாட்டாக ரேஷ்மாவை நாமினேட் செய்ய அது வினையாகிவிட்டது. ரேஷ்மா வெளியேறியுள்ளதால் பாவம் முகென் ரொம்ப ஃபீல் பண்ணுவார்.

    முகென் ராவ்

    முகென் ராவ்

    ரேஷ்மாவை சும்மா நாமினேட் செய்ய அது சீரியஸாகிவிடும் என்று முகென் எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார். சில போட்டியாளர்கள் வாரா வாரம் நாமினேட் ஆகி காப்பாற்றப்படுவதை முகென் பார்த்திருக்கிறார். அப்படி ரேஷ்மாவும் காப்பாற்றப்படுவார் என்று நினைத்து நாமினேட் செய்தாரோ என்னவோ?. புள்ளப் பூச்சி ரேஷ்மா எப்பொழுது நாமினேஷனுக்கு வருவார் என்று பிக் பாஸ் காத்திருந்தது போன்று தெரிகிறது.

    ஓட்டு

    ஓட்டு

    பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நாமினேஷன் மீது பார்வையாளர்களுக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை. நாமினேட் செய்யப்படும் ஆட்களில் யாரை வெளியேற்ற வேண்டும் என்று நினைத்து நாங்கள் ஓட்டு போட்டாலும் அது நடப்பது இல்லை. எங்களின் ஓட்டுகளை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு அவர் இஷ்டப்படும் போட்டியாளரை எவிக்ட் செய்வதற்கு நாங்கள் எதற்காக ஓட்டு போட வேண்டும் என்று கேட்கிறார்கள் பார்வையாளர்கள்.

    கவின்

    கவின்

    முக்கோண காதல் கதை கான்செப்ட்டை இப்போதைக்கு கைவிடுவதாக இல்லை பிக் பாஸ். அதனால் கவின், சாக்ஷி, லாஸ்லியாவுக்கு தற்போதைக்கு எவிக்ஷன் என்பதே இல்லை போன்று. அவர்கள் நாமினேட் ஆனாலும் காப்பாற்றப்படுகிறார்கள். இந்த கவின் காப்பாற்றப்படுவதை பார்த்து பார்வையாளர்கள் தான் நொந்து கொண்டிருக்கிறார்கள்.

    English summary
    Reshma who got nominated for the first time has got evicted from Bigg Boss 3 house.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X