Bigg Boss 3 கவின் லாஸ்லியாவை கரெக்ட் பண்ணிட்டாரோ: இதை முதலில் பாருங்க
Recommended Video
சென்னை: பிக் பாஸ் ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் கவின் லாஸ்லியாவை கரெக்ட் பண்ணிட்டாரோ என்கிறார்கள்.
பிக் பாஸ் 3 வீட்டில் கவின், அபிராமி, சாக்ஷி ஆகியோரை வைத்து முக்கோண காதல் கதையை ஓட்டுகிறார்கள் என்று பார்த்தால் தற்போது அது வேறு விதமாக திரும்பிக் கொண்டிருக்கிறது.
கவினையும், லாஸ்லியாவையும் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்க விரும்புகிறார் பிக் பாஸ்.
லாஸ்லியா
ஏற்கனவே இன்று வெளியான ப்ரொமோ வீடியோவில் கவின் லாஸ்லியாவிடம் கடலை போடுவது போன்று காட்டினார்கள். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் கவின் லாஸ்லியாவிடம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க அந்தம்மா ஒன்னும் வேண்டாம் என்கிறது. மேலும் தேவையில்லாத ஃபீலிங் எல்லாம் காட்டிவிட்டு லாஸ்லியா நடையை கட்டுவது போன்று காட்டியுள்ளார்கள்.

நல்ல பெண்
லாஸ்லியா நல்ல பெண் என்று பெயர் எடுத்த நிலையில் அவரை கவினுடன் கோர்த்துவிட்டு பார்வையாளர்களிடம் திட்டு வாங்க வைக்கப் பார்க்கிறார் பிக் பாஸ். ஆனால் ப்ரொமோ வீடியோவை வைத்து லாஸ்லியாவுக்கு கவின் மீது ஃபீலிங் வந்துவிட்டது என்று மட்டும் நம்பிவிட முடியாது. ப்ரொமோ வீடியோவில் ஏமாற்று வேலை செய்வார் பிக் பாஸ் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
எரிச்சல்
பிக் பாஸ் வீட்டில் அத்தனை பேர் இருந்தாலும் எப்பொழுது பார்த்தாலும் கவின், சாக்ஷி, லாஸ்லியா, வனிதா ஆகியோரை மட்டும் காட்டுவது ஏன் என்று கேட்கிறார்கள் பார்வையாளர்கள். டிஆர்பியை ஏற்ற இந்த நாடகமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எச்ச
கவின் கடலை பார்ட்டி என்று தெரிந்தும் டிஆர்பிக்காக நேரத்திற்கு ஒரு பெண்ணுடன் அவரை கோர்த்துவிடும் வேலைக்கு பெயர் என்ன தெரியுமா எச்ச என்கிறார்கள் நெட்டிசன்கள். சிலரோ இது சாக்ஷியை கடுப்பாக்கி விளையாட்டு காட்ட பிக் பாஸ் செய்யும் சேட்டை. இது தெரியாமல் லாஸ்லியா ஆர்மிக்காரர்கள் கதறிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











