Bigg Boss 3 சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட மீரா மிதுன்
Recommended Video
சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் மீரா மிதுன் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டுள்ளார்.
பிக் பாஸ் 3 வீட்டிற்கு தாமதமாக வந்தவர் மீரா மிதுன். சர்ச்சையை கிளப்புவர்கள் அல்லது சர்ச்சையில் சிக்கி செய்திகளில் வந்தவர்களாக பார்த்து போட்டியாளர்களாக தேர்வு செய்துள்ளார் பிக் பாஸ்.
அவரை சொல்லி தவறு இல்லை. இந்தி பிக் பாஸில் அப்படித் தான் சர்ச்சை ஆசாமிகளை போட்டியாளர்களாக ஆக்குகிறார்கள். அதை பார்த்து தான் தமிழ் பிக் பாஸும் இப்படி செய்துள்ளார்.

மீரா மிதுன்
மீரா மிதுன் பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்து பார்வையாளர்களிடம் திட்டு வாங்குகிறார். அவரை ஆதரிப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர் அழுதால் கூட அவரைப் பார்த்து யாரும் பாவப்பட மாட்டேன் என்கிறார்கள். மீரா மிதுன் நீலிக் கண்ணீர் வடிப்பதாகக் கூறி நெட்டிசன்கள் கடுப்பாகிறார்கள்.

நாமினேஷன்
பிக் பாஸ் 3 வீட்டில் நாமினேஷன் வேலை துவங்கிவிட்டது. இந்நிலையில் அபிராமியை நாமினேட் செய்த மீரா மிதுன் தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளார். அபிராமி ஐயரை நாமினேட் செய்கிறேன் என்று மீரா பேசியது யாருக்கும் பிடிக்கவில்லை. அது என்ன ஐயர், உங்களிடம் யாராவது கேட்டார்களா?. தேவையில்லாமல் பேசி ட்ரிக்கர் செய்யும் வேலையை நிறுத்திக் கொள்ளுங்கள் என்கிறார்கள் பிக் பாஸ் ரசிகர்கள்.

எலிமினேஷன்
ஜாதியை பற்றி பேசும் மீரா மிதுனை தான் முதலில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்ப வேண்டும் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். வெளியே பல பெண்களை ஏமாற்றிவிட்டு பிக் பாஸ் வீட்டிற்குள் அப்பாவி போன்று நாடகம் ஆடினால் நாங்கள் நம்ப மாட்டோம். நீங்கள் யார் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும் என்று பிக் பாஸ் ரசிகர்கரள் கூறுகிறார்கள்.

எரிச்சல்
மீரா மிதுன் தமிழ் பேசும் விதமே எரிச்சலை கிளப்புவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். வனிதாவுக்கு அடுத்தபடியாக நெட்டிசன்களிடம் அதிகம் திட்டு வாங்கும் போட்டியாளர் மீரா மிதுன் தான். அவருக்கு வாக்குகள் கிடைப்பது ரொம்பவே கஷ்டம். இந்நிலையில் டிஆர்பிக்காக அவருக்கு கள்ள ஓட்டு போட்டு பிக் பாஸ் காப்பாற்றக் கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











