Bigg Boss 3 லாஸ்லியாவுக்குள் இப்படி ஒரு சோகமா?: கண்ணீர் விட்ட பார்வையாளர்கள்
சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் லாஸ்லியா ஒரு விஷயத்தை பற்றி பேசி சக போட்டியாளர்களை மட்டும் அல்ல பார்வையாளர்களையும் அழ வைத்துவிட்டார்.
பிக் பாஸ் 3 வீட்டிற்கு வந்த நாளே லாஸ்லியாவுக்கு ட்விட்டரில் ஆர்மி துவங்கிவிட்டார்கள். அதை பார்த்தவர்கள் ஏம்பா, இதெல்லாம் உங்களுக்கே டூ மச்சாக தெரியவில்லையா என்று கேட்டனர்.
லாஸ்லியா ஆர்மி ஓவியா ஆர்மியை வம்புக்கிழுத்த சம்பவம் எல்லாம் நடந்தது.

லாஸ்லியா
பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்து சாப்பிடுவது, தூங்குவது, பசங்களுடன் சேர்ந்து டான்ஸ் ஆடுவதை தவிர இந்த லாஸ்லியா வேறு எதுவும் செய்வது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பிக் பாஸ் வீட்டின் மிக்சர் மாமி லாஸ்லியா என்று கிண்டல் செய்தார்கள் நெட்டிசன்கள். இந்நிலையில் தான் லாஸ்லியா அனைவரையும் அழ வைத்துவிட்டார்.

தற்கொலை
சிம்பதி கிரியேட் பண்ண லாஸ்லியா இலங்கை போரை பற்றி பேசிவிடுவாரோ என்று சிலர் அஞ்சினார்கள். ஆனால் அந்த பெண் அப்படி எதுவும் செய்யவில்லை. மாறாக நாட்டில் நிலவரம் சரியில்லாத போது தனது அக்கா அவசரப்பட்டு கோபத்தில் தற்கொலை செய்து கொண்டதை பற்றித் தான் பேசினார்.

சீன் இல்லை
லாஸ்லியாவின் அக்கா கோபக்காரியாம். ஒரு நாள் அம்மா திட்டியதால் தனது மற்றொரு தங்கச்சியை அடிக்க அவருக்கு வயிற்றில் கல் குத்தி ரத்தம் வந்துள்ளது. இதை பார்த்த அம்மா லாஸ்லியாவின் அக்காவை மேலும் திட்டிவிட்டு தங்கச்சியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அம்மா திட்டிய ஆத்திரத்தில் லாஸ்லியாவின் அக்கா தங்கச்சிப் பாப்பாவின் தொட்டில் கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். சின்னப் பிள்ளையான லாஸ்லியாவுக்கு அக்கா தற்கொலை செய்தது கூட புரியாமல் தூங்குகிறார் என்று நினைத்து அவரின் கன்னத்தில் தட்டி எழுப்பியுள்ளார்.

பெற்றோர்
காதல் பிரச்சனை, நட்பு, அப்பா, அம்மா திட்டினார்கள் என்பதற்காக யாரும் அவசரப்பட்டு தற்கொலை செய்யாதீர்கள். பின்னர் உங்களையே நினைத்து அனைவரும் எப்படி ஃபீல் பண்ணுவார்கள் தெரியுமா என்று லாஸ்லியா கூற சக போட்டியாளர்கள் மட்டும் அல்ல பார்வையாளர்களும் அழுதுவிட்டனர். இது வரை பிக் பாஸ் வீட்டில் அமைதியாக இருந்த லாஸ்லியா முதல் முறையாக பேசி அனைவரையும் ஃபீல் பண்ண வைத்துவிட்டார்.


Click it and Unblock the Notifications











