பிக் பாஸ் 3 புரொமோ வெளியானது.. இந்த ரணகளத்துலயும் ஒரு குதூகலமா?

By Staff

Recommended Video

BIG BOSS season 3: பிக் பாஸ் மூன்றாம் பாகம் ப்ரோமோ|Vijay Tv

சென்னை: பிக் பாஸ் சீசன் 3யின் அதிகாரப்பூர்வ புரொமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் பிக் பாஸ் முதல் சீசன் ஒளிபரப்பானது. வெளியுலகத் தொடர்பு இல்லாமல், பிரபலங்கள் போட்டியாளர்களாக ஒரே வீட்டில் 100 நாட்கள் வசித்தது மக்களுக்கு புதுமையாக இருந்ததால், அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

சினிமாவில் பிரபலங்களாக அண்ணாந்து பார்த்த பலரது உண்மையான முகம் இந்நிகழ்ச்சி மூலம் தெரிய வந்தது. புறணி பேசிக் கொண்டு, டாஸ்க் வந்தால் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு, டாஸ்க் முடிந்ததும் மீண்டும் ஒன்று சேர்ந்து கொண்டு என ஒரே குடும்பமாக போட்டியாளர்கள் வாழ்ந்ததை, மக்களும் குடும்பம் குடும்பமாக அமர்ந்து பார்த்தனர். முதல் சீசனில் ஆரவ் வெற்றியாளராக தேர்வானார்.

குற்றச்சாட்டு:

குற்றச்சாட்டு:

முதல் சீசனுக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து கடந்தாண்டு ஜூன் மாதம் பிக் பாஸ் சீசன் 2 ஒளிபரப்பானது. முதல் சீசன் போல் போட்டியாளர்கள் இயல்பாக இல்லை, கவனமாக விளையாடுகின்றனர், நடிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்தபோதும், அந்த நிகழ்ச்சிக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கவே செய்தது.

புரொமோ ஷூட்:

புரொமோ ஷூட்:

இந்நிலையில், மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி அடுத்த மாதம் ஒளிபரப்பாக இருக்கிறது. முந்தைய இரண்டு சீசன்களைப் போலவே இதனையும் கமலே தொகுத்து வழங்குகிறார். கடந்த வாரம் புரொமோ ஷூட் நடைபெற்றது.

புரொமோ வெளியானது:

அதன் தொடர்ச்சியாக இன்று பிக் பாஸ் சீசன் 3க்கான அதிகாரப்பூர்வ புரொமோ வெளியாகியுள்ளது. இதன் மூலம் மூன்றாவது சீசனையும் கமலே தொகுத்து வழங்குவது உறுதியாகியுள்ளது. அடுத்தமாதம் முதல் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் எனத் தெரிகிறது.

மகிழ்ச்சி:

பிக் பாஸ் 3 புரொமோ வெளியாகியுள்ளதால் அதன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஸ்வீட் எடு கொண்டாடு ரேஞ்சுக்கு அவர்கள் கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர். ஆனால், ஒரு சிலரோ தற்போது தீவிரவாதி சர்ச்சையில் கமல் சிக்கியுள்ள நிலையில், ‘இந்த ரணகளத்துலயும், ஒரு குதூகலமா?' எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X