Bigg Boss 3 இது என்ன ப்ரொமோ வீடியோவா இல்ல கமல் ட்வீட்டா?
சென்னை: ஷெரின், சாக்ஷி பேசும் ப்ரொமோ வீடியோவை பார்த்து பிக் பாஸ் 3 பார்வையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட்படி தான் நடக்கிறது என்று பார்வையாளர்கள் நம்புகிறார்கள். மேலும் பிக் பாஸ் இந்தி நிகழ்ச்சியில் இருந்து காட்சிகளை காப்பியடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.
பிக் பாஸ் 3 வீட்டிற்குள் நேற்று போலீசார் நுழைந்தது கூட இந்தியில் ஏற்கனவே நடந்தது தான்.
கவின்
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை விட ப்ரொமோ வீடியோ தான் பரபரப்பாக இருக்கும். இந்நிலையில் சாக்ஷி, ஷெரின் கூடிப் பேசிய ப்ரொமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் இதுவே கொடூர மொக்கையாக இருந்தால் இன்று இரவு நிகழ்ச்சியை பார்க்கவே முடியாது போன்றே என்று தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சி மட்டும் அல்ல வர, வர ப்ரொமோ வீடியோக்களும் மொக்கையாக உள்ளது என்று புகார் எழுந்துள்ளது.
காதல்
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களின் உணர்ச்சிகளுடன் விளையாடுகிறார்கள். ஸ்க்ரிப்ட்படி அவர்கள் நடந்து கொள்கிறார்கள். ஆனால் பார்வையாளர்கள் அவர்களைப் பற்றி கேவலமாக விமர்சிக்கிறார்கள். மீம்ஸ் கிரியேட்டர்களோ மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள்.
நெட்டிசன்கள்
பிக் பாஸ் 3 ப்ரொமோ வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் என்னடா பேசுறீங்க, ஒன்னுமே புரியவில்லை. யாராவது சொல்லுங்கப்பா என்று கேட்டுள்ளனர். சிலரோ கமல் ஹாஸன் ட்வீட் போட்டது போன்று உள்ளது என்கிறார்கள். இது பிக் பாஸ் நிகழ்ச்சியா, மெகா சீரியலா என்று வித்தியாசம் தெரியாத அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. யாராவது சீரியல் இயக்குநரை அழைத்து வந்து ஸ்க்ரிப்ட் எழுத வைத்துவிட்டீர்களா பிக் பாஸ் என்று கேட்கிறார்கள் நெட்டிசன்கள்.
பெண்கள்
வனிதா விஜயகுமார், அபிராமி, ஷெரின், சாக்ஷி ஆகியோரை பார்த்தாலே பல பார்வையாளர்களுக்கு பத்திக்கிட்டு வருகிறது. இவர்கள் எல்லாம் பெண்களே இல்லை என்று விமர்சிக்கிறார்கள். சினிமா கெரியர் பிக்கப் ஆகும் என்ற ஆசையில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து பார்வையாளர்களிடம் கெட்ட பெயர் வாங்குவது தான் மிச்சம்.


Click it and Unblock the Notifications











