என்னை விட உனக்கு லாஸ்லியா முக்கியமாப் போயிட்டாளா?: கவினுடன் சாக்ஷி மோதல்
Recommended Video
சென்னை: சாக்ஷி அகர்வால் கடலை பார்ட்டி கவினிடம் கோபப்படும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் கவின் கடலை போடுவதையே முழுநேர வேலையாக பார்த்து வருகிறார். இதை கமல் ஹாஸன் கூட கிண்டல் செய்து அவரை அசிங்கப்படுத்தினார்.
அனைவரிடமும் கடலை போட்டாலும் சாக்ஷி அகர்வாலிடம் மட்டும் கூடுதலாக நெருக்கம் காட்டுகிறார் கவின்.
கவின்
கவின் லாஸ்லியாவிடம் பேசியது ஒரு பெரிய குற்றம் போன்று சாக்ஷி அவருடன் சண்டை போடும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. நான் யாரையும் காதலிக்கவில்லை என்று கவின் தெரிவித்தும் சாக்ஷிக்கு அது ஏன் இன்னும் புரியவில்லை. அவர் லாஸ்லியாவுடன் பேசினால் தான் என்ன தப்பு. லாஸ்லியா அனைவரையுமே நண்பர்களாகத் தான் பார்க்கிறார்.
பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட ப்ரொமோ வீடியோக்கள் தான் பரபரப்பாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரொமோ வீடியோ பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லையாம். கொடூர மொக்கை என்கிறார்கள். குறிப்பாக அந்த காதல் கதை சகிக்கவில்லையாம்.
வெளியேற்றுங்கள்
சாக்ஷியும், கவினும் செய்வதை பார்த்து பார்த்து போர் அடிக்கிறது. அதனால் தயவு செய்து சாக்ஷியை இந்த வாரம் வெளியேற்றுங்கள் பிக் பாஸ் என்று பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிக் பாஸ் போட்டுள்ள திட்டத்தை புரிந்து கொள்ளாமல் இப்படி கோரிக்கை வைக்கிறார்களே.
காதல்
நான் யாரையும் காதலிக்கவில்லை என்று கவின் நேற்று கூறியுமா இந்த சாக்ஷி அவர் பின்னாலேயே போகுது. இது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா?. உங்க சண்டையில் எங்க தங்கம் லாஸ்லியாவை ஏன்டா வம்புக்கு இழுக்குறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளது லாஸ்லியா ஆர்மி. இதே மாதிரி போனால் கவின் என்னை காதலித்து ஏமாற்றிவிட்டார், நியாயம் வேண்டும் பிக் பாஸ் என்று சாக்ஷி முறையிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் நெட்டிசன்கள். கவின் லாஸ்லியாவிடம் பேசினால் சாக்ஷிக்கு என்ன பிரச்சனையாம், ஓவராகத் தான் சீன் போடுகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











