Bigg Boss 3 கார்டில் சித்தப்பு பெயர்: கேம் ஆடுகிறாராம் பிக் பாஸ்
சென்னை: இன்று வெளியாகியுள்ள 3வது ப்ரொமோ வீடியோவில் கமல் ஹாஸன் தெரிவித்த கார்டில் சித்தப்பு சரவணனின் பெயர் உள்ளது.
பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து இன்று இரவு ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள 3 ப்ரொமோ வீடியோக்களிலுமே அது பற்றி பேசவில்லை.
2வது வீடியோவை போன்றே 3வது வீடியோவும் காப்பாற்றப்படுபவர் பற்றியே உள்ளது.
சரவணன்
யாரை தக்க வைப்பது என்ற பெயருடன் ஒரு கார்டு வீட்டில் உள்ளது என்று கமல் ஹாஸன் தெரிவித்துள்ள ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. கமல் கூறியதும் போட்டியாளர்கள் கார்டை தேடி அலைய அது சித்தப்பு சரவணனுக்கு கிடைத்தது. நாம் தான் வீட்டிற்கு போகிறோம் என்று நினைத்து சித்தப்பு ஒரு நிமிஷம் சந்தோஷப்பட்டுவிட்டார்.

மனைவிகள்
நீங்கள் வீட்டிற்கு போகவில்லை மாறாக காப்பாற்றப்பட்டுள்ளீர்கள் என்று சக போட்டியாளர்கள் கூறியதும் ஓ அப்படியா என்றார் சரவணன். 2 மனைவிகளையும் ஒரே வீட்டில் விட்டுவிட்டு வந்துள்ளதாக சரவணன் கமலிடம் கூற அவரோ அப்போ நீங்கள் பதறுவது குழந்தைக்காக இல்லை என்று கிண்டல் செய்துள்ளார்.
ஓட்டு
சரவணன் கடந்த வாரம் முழுவதும் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. அவர் மீது பிக் பாஸும் ஃபோகஸ் பண்ணவில்லை. அவரை வெளியேற்றுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார். அவரை காப்பாற்ற எல்லாம் யார் ஓட்டு போட்டது. இது அந்த பிக் பாஸின் பித்தலாட்டம் என்கிறார்கள் பார்வையாளர்கள்.
சண்டை
வனிதா மட்டும் வெளியேற்றப்பட்டால் இனி நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க மாட்டேன் என்று இத்தனை நாளாக அவரை திட்டயவர்களே தெரிவித்துள்ளனர். அடிச்சாலும் புடிச்சாலும் வனிதா இருந்தால் தான் பிக் பாஸ் கெத்து என்கிறார்கள் பார்வையாளர்கள். ப்ரொமோவில் காட்டாமல் சஸ்பென்ஸ் வைத்தால் மட்டும் எங்களை சமாதானம் செய்ய முடியாது என்கிறார்கள். வனிதாவை ரகசிய அறையில் சில நாட்கள் தங்க வைத்துவிட்டு அழைத்து வாங்க, வெளியேற்றிவிடாதீர்கள் என்று ஏராளமானோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வனிதா ஆர்மி
லாஸ்லியா ஆர்மிக்கு டஃப் கொடுக்கிறாங்க இந்த வனிதா ஆர்மி. நடத்துங்க நடத்துங்க...


Click it and Unblock the Notifications











