Bigg Boss 3 முதல் ஆளா போக வேண்டியவர் இன்று போகிறார்
சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து இன்று இரவு யார் வெளியே போகிறார் என்பது குறித்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் இன்று வெளியேற்றப்படுவார். இந்நிலையில் இன்று காலை வெளியான ப்ரொமோ வீடியோவை பார்த்த பார்வையாளர்கள் கடுப்பாகி திட்டத் துவங்கினர்.
இதையடுத்து எவிக்ஷன் குறித்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
கமல் ஹாஸன்
இன்று என்ன கிழமை என்று தெரியும், எவிக்ஷன் டைம் என்று கமல் ஹாஸன் கூறும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. ஒருவர் வெளியேற வேண்டும் என்று கமல் கூறியதும் மோகன் அப்பா இந்த வீட்டை விட்டு வெளியே போகிறார் போன்று கூறி அபிராமி அழுகிறார். அவருக்கு சேரன், முகென் ராவ் ஆகியோர் ஆறுதல் கூறுகிறார்கள். நான் இருந்தால் என்ன போனால் என்ன என்று மோகன் வைத்யா கூறியுள்ளார்.

அபிராமி
மோகன் அப்பா கிளம்பப் போகிறார் என்று கூறி அபிராமி அழுவதை பார்த்து தர்ஷன் கொடுத்த ரியாக்ஷன் அருமை. அபிராமியின் கண்ணீரை பார்த்த பார்வையாளர்களோ அடேங்கப்பா என்னா நடிப்புடா சாமி என்று கூறி கிண்டல் செய்துள்ளனர்.

கோரிக்கை
மோகன் வைத்யாவை வீட்டை விட்டு விரட்டுங்க பிக் பாஸ் என்று பார்வையாளர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். முதல் வாரமே அவர் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றாவது பிக் பாஸுக்கு தோன்றியதே என்று பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முத்தம்
மோகன் வைத்யா இன்று நீங்கள் தான் வெளியேற்றப்படுகிறீர்கள் என்று கமல் ஹாஸன் கூறினால் ஒரு நிமிஷம் சார் அனைத்து பெண்களையும் கடைசியாக ஒரு முறை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்துவிட்டு வருகிறேன் என்று அவர் கூறுவது போன்று மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளனர். மோகன் வைத்யாவுடன் ஒப்பிடும்போது சினேகன் எல்லாம் ஒன்றுமே இல்லை என்கிறார்கள் பார்வையாளர்கள். அப்பா, அப்பா என்று கூறி சேட்டை செய்யும் மோகன் வைத்யாவை முதலில் விரட்டிவிடுங்க பிக் பாஸ் என்று பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











