என்ன பிக் பாஸ் இப்டி பண்றீங்க.. நிச்சயமா இந்தவாரமும் வாங்கி கட்டிக்க போறார் நம்மவர்.. ஏன் தெரியுமா?
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் அபிராமிதான் வெளியேறுவார் எனக் கூறப்படுகிறது.
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்பது தெரியவந்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அதில் பாத்திமா பாபு முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார். பின்னர் மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா என ஒவ்வொருவராக வெளியேறினர். பேருந்தில் பெண்களை உரசிய விவகாரத்தில் நடிகர் சரவணன் அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கஸ்தூரி 17வது போட்டியாளராக வைல்ட் கார்ட் மூலம் உள்ளே சென்றுள்ளார்.

சரவணன்:
சனிக்கிழமையான இன்று கமல் வந்து கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்கள் பற்றி பேசுவார். கடந்த வாரம் சரவணன் அதிரடி வெளியேற்றம், கஸ்தூரி புதிய போட்டியாளராக வந்தது எனப் பல பரபரப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. அதிலும் குறிப்பாக சரவணன் ஏன் வெளியேறினார் என்பது குறித்து கமல் இன்று பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஆர்பி:
அதோடு, இந்த வாரம் நாமினேசனில் மூன்று பேர் தான் உள்ளனர். லாஸ்லியா, அபிராமி, சாக்ஷி என மூன்று பேருமே பிக் பாஸ் வீட்டில் முக்கியமானவர்கள். எனவே, இவர்களில் யாரை வெளியில் அனுப்பினாலும், நிச்சயம் டி ஆர் பி அடி வாங்கும். எனவே இந்த வார நாமினேசன் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப் படுகிறது.

லாஸ்லியா:
நமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் படி, சாக்ஷி அல்லது அபிராமி இருவரில் ஒருவர் தான் வெளியேற்றப்படுவார்கள் எனத் தெரிகிறது. லாஸ்லியாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்து அவர் முதலிடத்தில் உள்ளார். எனவே, அவர் வெளியேறுவதற்கு வாய்ப்பே இல்லை. சாக்ஷிக்கு மக்களிடையே அதிக அதிருப்தி உள்ளது.

மக்கள் எதிர்பார்ப்பு:
கடந்த சில வாரங்களாகவே அவரைத் தான் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் ஏதாவது காரணங்களைச் சொல்லி தொடர்ந்து அவரை பிக் பாஸ் காப்பாற்றி வருகிறார். அதன் அடிப்படையில் பார்த்தால், இந்த வாரமும் சாக்ஷி வெளியேறுவது சந்தேகம் தான்.

சீக்ரெட் ரூம்:
அபிராமி தான் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. ரொம்பவும் சென்சிடிவான அபியை சீக்ரெட் ரூமிற்கு அனுப்பி விடுவார்கள் என்கின்றனர். பின்னர் சாக்ஷியையும், முகெனையும் பழக வைத்து, அதை சீக்ரெட் ரூமில் இருந்து அபிராமியை பார்க்க வைக்க பிக் பாஸ் திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது.

அபியின் நாடகம்:
சும்மாவே முகென் விசயத்தில் மிகவும் பொசசிவ் ஆனவர் அபி. எனவே, சீக்ரெட் ரூமில் இருந்து வெளியில் வந்ததும், அவர் முன்பை விட ஆக்ரோசமாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்க்கலாம் இது எந்தளவிற்கு உண்மை ஆகிறது என்று. ஆனால், வீட்டை விட்டு வெளியேறும் முன் நிச்சயம் பெரிய டிராமாவே நடத்துவார் என்பது மட்டும் நிஜம்.


Click it and Unblock the Notifications