Exclusive:"அவர வெளியே அனுப்புனதுக்கான காரணமே வேற பாஸு"..சரவணனிடம் பேசியது பற்றி பரணி பரபரப்பு பேட்டி

குடும்பத்தை பார்க்க வேண்டும் என்பதற்காகத் தான் சரவணன் வெளியில் சென்றதாக நடிகர் பரணி தெரிவித்துள்ளார்.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1: Day:44: சரவணன் வெளியேற்றத்தில் சேரனுக்கு சந்தோஷம்?- வீடியோ

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சரவணன் வெளியேற்றப்பட்டதற்காக சொல்லப்பட்ட காரணம் தவறானது என நடிகர் பரணி தெரிவித்துள்ளார்.

பேருந்தில் பெண்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட விவகாரத்தில் நடிகர் சரவணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட பிறகும், அவமானப்படுத்தும் வகையில் அவரை வெளியேற்றியது மக்களை அதிர்ச்சி அடைய செய்தது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சரவணன், சில ஊடகங்களுக்கு நேற்று பேட்டி அளித்ததாக செய்தி வெளியானது. அதில், பிக் பாஸ் வீட்டில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து அவர் வேதனை தெரிவித்திருந்தார்.

குழந்தை தான் காரணம்:

குழந்தை தான் காரணம்:

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து சரவணன் தாமாக தான் வெளியேறினார் என அவருக்கு மிகவும் நெருக்கமானவரான நடிகர் பரணி கூறியுள்ளார். குழந்தையை பிரிந்து இருக்க முடியாத காரணத்தினால் தான் சரவணன் போட்டியில் இருந்து விலகியதாக அவர் தெரிவித்துள்ளார்.

வீட்டுக்குப் போகணும்:

வீட்டுக்குப் போகணும்:

இதுகுறித்து நம்மிடம் பேசிய பரணி, "பிக் பாஸ் வீட்டில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்டதற்காக சொல்லப்பட்ட காரணம் தவறானது. சரவணனால் அவருடைய குழந்தையை விட்டு பிரிந்து இருக்க முடியவில்லை. எனவே தான் அவர் கடந்த 3 நாட்களாக தன்னை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என பிக் பாஸிடம் வலியுறுத்தினார்.

குழந்தையுடன் விளையாட்டு:

குழந்தையுடன் விளையாட்டு:

இந்நிலையில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை சரவணனை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினார்கள். அவர் வீட்டிற்கு வந்து தற்போது குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார். இன்று காலை கூட அவரிடம் பேசினேன். நன்றாக தான் இருக்கிறார்.

கண்டெண்ட்:

கண்டெண்ட்:

ஒரு தவறு நடந்தது. அதற்காக அவர் மன்னிப்பும் கேட்டு விட்டார். அதற்கடுத்த பத்து நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தான் இருந்தார். எல்லா டாஸ்க்கிலும் கலந்து கொண்டார். அப்போதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு, திடீரென வெளியேற்றியது கண்டெண்ட்டுக்காக செய்திருக்கலாம். ஆனால் உண்மை அது இல்லை.

இதுதான் காரணம்:

இதுதான் காரணம்:

அவர் குழந்தைக்காகத்தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் என்று சொன்னால், இந்த அளவுக்கு பிரச்சினையாகி இருக்குமா.. டிஆர்பி எகிறி இருக்காதுல்ல.. இந்தளவுக்கு இந்திய அளவுல பிக் பாஸ் பத்தி பேசி இருக்க மாட்டாங்கள்ல.. அதனால் அப்படி மாற்றி காரணம் சொல்லி இருக்கலாம்.

பிரச்சினையில்லை:

பிரச்சினையில்லை:

இப்போ அவர் ஜாலியாக இருக்கிறார். சந்தோசமாக தன் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். இது தான் உண்மை. மற்றபடி அங்கு ஒரு பிரச்சினையுமில்லை' என இவ்வாறு பரணி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X