“இவன் கோர்த்து விடுறான்..” கமலை ஒருமையில் பேசியதால் எவிக்ட் ஆனாரா சரவணன்? - வைரலாகும் வீடியோ!

கமல் குறித்து சரவணன் ஒருமையில் பேசிய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

Recommended Video

கமலை ஒருமையில் பேசியதால் எவிக்ட் ஆனாரா சரவணன்? - வைரலாகும் வீடியோ!

சென்னை : கமல் குறித்து சரவணன் ஒருமையில் பேசிய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. இந்த காரணத்தினால் தான் அவர் அதிரடியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

மீரா மிதுன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட வாரம், பெண்களை பேருந்தில் உரசுவதற்காகவே சென்றதாக கமல் முன்னிலையில் கூறினார் சரவணன். அப்போது நகைச்சுவையாக இந்த விவகாரம் பார்க்கப்பட்டது. ஆனால், அதற்குப் பின்னர் பெரும் சர்ச்சை ஏற்பட்டதால், சரவணன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.

இத்தோடு இந்தப் பிரச்சினை முடிந்து விட்டது என நினைத்திருந்த போது, நேற்றிரவு அதிரடியாக பிக் பாஸ் வீட்டிலிருந்து சரவணன் வெளியேற்றப்பட்டார். இது பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் இரவு முதலே சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்திற்குரிய பொருளாக மாறியுள்ளது. சரவணனுக்கு ஆதரவாக ஏராளமான நெட்டிசன்கள் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர். இதனால் இந்திய அளவில் இந்த விவகாரம் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

வீடியோ வைரல்

இந்தச் சூழ்நிலையில், கமலை ஒருமையில் சரவணன் பேசியதாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதன் காரணமாகவே அவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப் பட்டிருப்பதாகவும் அந்த டிவீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறு எபிசோடில் போட்டியாளர்களை கூடு விட்டு கூடு பாயும் டாஸ்க் ஒன்றைச் செய்ய வைத்தார் கமல்.

இவன் கோர்த்து விடுறான்

இவன் கோர்த்து விடுறான்

அப்போது லாஸ்லியா மற்றும் ஷெரீனுடன் அவர் பேசிய போது, ‘லாஸ்லியாவிற்கு திடீரென திமிர் அதிகரித்துள்ளது' என்ற கேள்வியை முன் வைத்தார். அப்போது அருகில் இருந்த சரவணன், ‘இவன் கோர்த்து விடுறான்' எனக் கூறுகிறார். இந்த டயலாக் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இதனால் தான் அடுத்தநாளே சரவணனை வெளியேற்றி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

நியாயமற்ற செயல்

"சித்தப்பு சரவணனை வெறியேற்றியது நியாயமற்ற செயல். கமல் சாருக்கும் அது தெரியும். ஒரு மனிதன் மன்னிப்புக் கேட்டப் பிறகும் நீங்கள் திருப்தியாகவில்லை என்றால் என்ன செய்வது. ஒருவரை கெட்டப் பெயருடன் வெளியே அனுப்புவது நியாயமற்ற செயல்", என மிகவும் வருந்தியுள்ளளார் ஒரு ரசிகர்.

வலுவான செய்தி

"சரவணனின் வெறியேற்றம் அதிர்ச்சி அளிக்கிறது. ஆனால் அது தேவையானதும் கூட. இதன் மூலம் இந்த சமூகத்து ஒரு வலுவான செய்தி சொல்லப்பட்டுள்ளது. பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது கண்டனத்துக்குரியது. அதுவும் சம்மந்தப்பட்ட நபர், அவர் 52 வயதானவராக இருந்தாலும், இப்படி பொதுவெளியில் பகிரங்கமாக பேசுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல", என இவர் குறிப்பிட்டுள்ளார்.

பெயர் கெட்டுப்போகும்

"ஆமாம். சரவணன் முந்தைய காலத்தில் தவறு செய்தார் தான். அதைப்பற்றி கொஞ்சம் கூட அறிவே இல்லாமல் வெளிப்படையாக பேசினார் தான். அவரை எச்சரிக்கை செய்ததோடு நிறுத்தியிருக்க வேண்டும். அவர் மனம் திருந்தி மன்னிப்பு கேட்ட உடனே வழக்கு முடிந்துவிட்டது. இந்த வெறியேற்றத்தினால், இந்த விவகாரத்தை பற்றி அனைவரும் ஆரம்பத்தில் இருந்து பேசத் தொடங்குவார்கள். இப்போது தான் சம்மந்தப்பட்ட தொலைக்காட்சியின் பெயர் அதிகமாக கெட்டுப்போகும்", என இவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X