"நீ ஒரு காமெடி பீஸு".. கவினை கிழித்து தொங்கவிட்ட கஸ்தூரி.. பூனைக்கு மணி கட்ட ஆள் வந்துடுச்சுடோய்!
பிக் பாஸ் வீட்டிற்குள் இரண்டாவது நாளும் தனது வேலைகளை காட்டி வருகிறார் நடிகை கஸ்தூரி.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு வைல்ட் கார்டு மூலம் சென்றுள்ள நடிகை கஸ்தூரி, பூனைக்கு மணிக்கட்டும் வேலையை ஆரம்பித்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் நேற்று சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்தார் நடிகை கஸ்தூரி. முதல் நாளே போட்டியாளர்களை கதறவிட்டார். உள்ளே நுழைந்ததுமே சாக்ஷியை டார்கெட் செய்தார். பிறகு சேரன், தர்ஷன், ஷெரீன் என எல்லோரையும் கலாய்த்தார்.
சாக்ஷியை தலைக்கீழாக நிற்கவிட்டது, ஷெரீனை தோப்புகரணம் போட வைத்தது, மதுமிதாவை தர்ஷனுக்கு குடை பிடிக்க வைத்தது, கவினை மூக்கால் மன்னித்துவிடு என எழுத வைத்தது என முதல் நாளே போட்டியாளர்களுக்கு ஷாக் டிரீட்மெண்ட் கொடுத்தார் கஸ்தூரி.

2வது நாளும் தொடரும்
இது இரண்டாவது நாளும் தொடரும் என இன்று வெளியாகியுள்ள முதல் புரொமோவின் மூலம் தெரிகிறது. சிட்டவுட் ஏரியாவில் கவின், கஸ்தூரி, சேரன், மதுமிதா உள்ளிட்டோர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது காதல் பிரச்சினை தொடர்பாக கவினை லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார் கஸ்தூரி.

சரமாரி கேள்வி
கடந்த 45 நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வரும் ரசிகர்கள் மனதில் எழும் கேள்வியை முகதாட்சண்யம் எதுவும் பார்க்காமல் கவினிடம் கேட்கிறார் அவர். "நான்கு பெண்களை லவ் பண்றது ஒரு காமெடின்னு உங்களுக்கு தோணிருக்குல்ல", என கவினிடம் முகத்துக்கு நேராக கேட்கிறார். அப்போது குறுக்கிடும் சேரன், கவின் காமெடிக்காக இதை செய்யவில்லை என்கிறார்.

செம கலாய்
கவினுடையே எதிர்பார்ப்பு ஜேம்ஸ் பாண்ட் ரேஞ்சுக்கு உள்ளது. ஆனால் ரியாலிட்டி வடிவேலு மாதிரி தான் உள்ளது என செம கலாய் கலாய்க்கிறார் கஸ்தூரி. இதேபோல், ஒரு பெண் நான்கு பசங்கள ஒரே நேரத்தில் காதலித்தால் காமெடியாக பார்ப்பீர்களாக? என கஸ்தூரி கேட்கிறார். இதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் விழிப்பிதுங்கி நிற்கிறார் கவின்.

சபாஷ் இதை தான் எதிர்பார்த்தோம்
சபாஷ் இப்படி ஒரு ஆளை தான் இத்தனை நாட்கள் எதிர்பார்த்தோம் என ரசிகர்கள் கஸ்தூரியை பாராட்டி வருகின்றனர். கொஞ்ச நஞ்ச ஆட்டமாடா போட்டீங்க, இப்ப வந்துடாங்கள்ல எங்க தலைவி. இப்ப பேசுங்கடா பார்ப்போம் என மார்தட்டுகிறார்கள் கஸ்தூரி ஆர்மி கைஸ்.


Click it and Unblock the Notifications











