பிக் பாஸ் வீடு பத்திட்டு எரியப் போகுது.. கிப்ட் பார்சல் பண்ணி யாரை உள்ளே அனுப்பி இருக்காங்க பாருங்க!

பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகை கஸ்தூரி சென்றுள்ளார்.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 :Day:46 : இனி வீட்டிற்குள் நடக்கவிருக்கும் விபரீதம் என்னவாக இருக்கும்

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகை கஸ்தூரி சென்றுள்ளார். அவர் வைல்ட் கார்ட் மூலம் போட்டியாளராக சென்றுள்ளாரா அல்லது விருந்தினராக சென்றுள்ளாரா என மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

பிக் பாஸ் முதல் சீசனில் இருந்தே நிச்சயம் இவரும் ஒரு போட்டியாளர் என அடிபடும் பெயர்களில் ஒன்று கஸ்தூரி. காரணம் மனதில் பட்டதை அப்படியே சொல்லும் அவரது குணம் தான். அதோடு சமூகவலைதளங்களில் சகட்டுமேனிக்கு அவர் போடும் பதிவுகளும் ஒரு காரணம். தயவு தாட்சண்யம் இன்றி அவர் போடும் பதிவுகளால் பல சர்ச்சைகளில் அவர் சிக்கியிருக்கிறார்.

இதனாலேயே அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றால் கச்சேரி களை கட்டும் என ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.

எதிர்பார்ப்பு:

எதிர்பார்ப்பு:

ஆனால், முதல் இரண்டு சீசன்களிலுமே இந்தா வருகிறேன். அந்தா வருகிறேன் எனப் போக்குகாட்டி, கடைசி வரை கஸ்தூரி வரவேயில்லை. சரி, மூன்றாவது சீசனிலாவது அவர் போட்டியாளர் ஆவாரா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. ஆனால் வழக்கம் போல் கஸ்தூரி இம்முறையும் போட்டியாளர்களுடன் பிக் பாஸ் வீட்டிற்குள் போகவில்லை.

போட்டோ வைரல்:

சரி, வைல்ட் கார்டு மூலமாவது அவர் உள்ளே வருவார் என மக்கள் எதிர்பார்த்தனர். அப்போது தான், அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் போகிறார் என ஒரு செய்தி வெளிவந்தது. கஸ்தூரி, விஜய் டிவி ஊழியர் ஒருவருடன் வாட்ஸ் அப்பில் பேசிய உரையாடல் புகைப்படம் ஒன்றும் வைரலானது. ஆனால், வழக்கம் போல் அதையும் கஸ்தூரி மறுத்தார்.

இன்ப அதிர்ச்சி:

இன்ப அதிர்ச்சி:

அதோடு, பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் நடவடிக்கைகளைப் பார்த்தால் தனக்கு அங்கு போக வேண்டும் என்ற எண்ணமே போய் விட்டதாக அவர் கூறி வந்தார். அதனால் கஸ்தூரி எப்படியும் பிக் பாஸ் வீட்டிற்குள் போக மாட்டார் என மக்கள் கருதி வந்தனர். இந்நிலையில், போட்டியாளர்களுக்கும், மக்களுக்கும் இன்ப அதிர்ச்சி தரும் விதமாக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கிறார் கஸ்தூரி.

கிப்ட் பாக்ஸ்:

கிப்ட் பாக்ஸ்:

இன்றைய புரொமோவில் அக்காட்சிகள் இடம் பெற்றுள்ளது. போட்டியாளர்களுக்கு பரிசு என பெரிய பெட்டியை அனுப்பி இருக்கிறார் பிக் பாஸ். போட்டியாளர்களும் ஆர்வமாக அதனைத் திறந்து பார்த்தால் உள்ளே கஸ்தூரி. போட்டியாளர்கள் அப்படியே ஷாக்காகி விட்டனர். ஆனாலும் அதனை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அவரை சிரித்த முகத்துடன் வரவேற்கின்றனர்.

 கேள்விகள் ஏராளம் :

கேள்விகள் ஏராளம் :

ஏற்கனவே இந்த சீசனில் ஒவ்வொரு போட்டியாளர் பற்றியும் கஸ்தூரி தினமும் தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சித்து வருகிறார். போட்டியாளர்களிடம் நிறைய கேள்விகள் கேட்க வேண்டும் எனவும் அவர் கூறி வந்தார். இந்தச் சூழ்நிலையில் தான் பிக் பாஸ் வீட்டிற்குள் அவர் சென்றிருக்கிறார்.

வைல்ட் கார்ட்:

வைல்ட் கார்ட்:

வைல்ட் கார்ட் மூலம் போட்டியாளராக உள்ளே சென்றிருக்கிறாரா இல்லை சிறப்பு விருந்தினராக போட்டியாளர்களை ஒரு கை பார்க்க சென்றிருக்கிறாரா எனத் தெரியவில்லை. ஆனால், அவரது முதல் டார்கெட்டே சாக்‌ஷி தான் போலும். சாக்‌ஷியிடம் அவர் சில கேள்விகள் கேட்பது போல் புரொமோவில் காட்சிகள் உள்ளன.

நாளை நமதே:

எது எப்படியோ கஸ்தூரியால் பிக் பாஸுக்கு கண்டெண்ட்டிற்கு பஞ்சமிருக்காது. மக்களுக்கும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது என நம்பலாம். தான் பிக் பாஸ் வீட்டிற்குள் போவதைத் தான் சூசகமாக, ‘நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்துவிடும்! #நாளைநமதே" என பதிவாக வெளியிட்டிருந்தாரா எனத் தெரியவில்லை.

தரமான சம்பவம்:

அதோடு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மீராவையும் அவர் ராமேஸ்வரத்தில் சந்தித்துப் பேசினார். நிச்சயம் அப்போது பிக் பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் பற்றி அவரிடம் நிறைய தகவல்களைப் பெற்றிருப்பார். எனவே, எல்லா போட்டியாளர்களையும் ஒரு கை பார்க்காமல் வெளியில் வர மாட்டார் என்பது மட்டும் நிச்சயம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X