புரோமோவை போட்டு.. அப்புறம் டெலிட் பண்ணி.. பாவம் வனிதா போய்டதால பிக் பாஸே எப்டி கன்பியூஸ் ஆகிட்டாரு!

வனிதா வெளியேறிவிட்டதால், பிக் பாஸ் குழப்பமடைந்துள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

சென்னை: வனிதா நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப் பட்டதாலோ என்னவோ, பிக் பாஸே கன்பியூஸ் ஆகிவிட்டார் போல.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்று வாரங்களைக் கடந்து நான்காவது வாரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் இரண்டாவது போட்டியாளராக வனிதா வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

இதனால் பிக் பாஸே கண்டெண்ட் இல்லாமல் தடுமாறி விட்டார் போல. பெரும்பாலும் புரொமோக்களில் வனிதா ஆவேசமாக சண்டை போடுவது போன்ற காட்சிகள் இருக்கும். அதைப் பார்த்து விட்டுத் தான் மக்கள் நிகழ்ச்சியை ஆர்வமாக பார்ப்பார்கள்.

புரொமோ டெலிட்:

புரொமோ டெலிட்:

தற்போது வனிதா இல்லாததால், முதலில் இந்த வார நாமினேசனை வைத்து முதல் புரொமோவை பிக் பாஸ் டீம் இன்று காலை வெளியிட்டது. அதில் மோகன் வைத்யா பேசுவது போல் காட்சிகள் இருந்தது. ஆனால் என்ன நினைத்தார்களோ உடனடியாக அதை நீக்கி விட்டு, வேறொரு புரொமோவை போட்டிருக்கிறார்கள்.

மீரா பற்றி பேச்சு:

மீரா பற்றி பேச்சு:

இதில், சேரனும் ஷெரீனும் கார்டன் பகுதியில் அமர்ந்து மீராவைப் பற்றி புறணிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர் தர்ஷனைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகக் கூறியது பற்றி அவர்கள் பேசுவது போல் அந்த புரொமோ காட்சிகள் உள்ளது. இடையிடையே மீராவையும் காட்டுகிறார்கள்.

பிக் பாஸே குழம்பிட்டாரு:

பிக் பாஸே குழம்பிட்டாரு:

இந்தப் புரொமோவைப் பார்த்து விட்டு நெட்டிசன்கள் பிக் பாஸைக் கலாய்த்து வருகின்றனர். ‘வனிதா போய் விட்டதால் பிக் பாஸே கன்பியூஸ் ஆகிட்டார். அதான் முதலில் ஒரு புரொமோவை போட்டு விட்டு, பின்னர் அதனை டெலிட் செய்து விட்டார்' என அவர்கள் கமெண்டில் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள் கவலை:

ரசிகர்கள் கவலை:

அதோடு, மீரா தான் அடுத்த வனிதா எனக் கருதப்படுவதால், அவரைப் பற்றிய காட்சிகளை புரொமோவில் வைத்துள்ளனர். ஆனால் வனிதா அளவிற்கு மீரா சிறப்பாக சண்டை போட மாட்டார். மீராவைக் காட்டியே இனி வெறுப்பேற்ற போகிறார்கள். நிச்சயம் டிஆர்பி குறையப் போகிறது என ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X